சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் அமைந்துள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ. 3.59 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள நுழைவு வளைவை திறந்து வைத்த அவர், கதிரியக்கத்துறைக்கு அதிநவீன கருவிகளையும் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களை அவர், நிபா வைரஸ் ஒருவகை தொற்று நோய் என்பதால் அதனைத் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார்.
மேலும் பேசிய அவர், பீகாரில் பரவும் மூளைக் காய்ச்சல் நோய் தொற்று நோய் அல்ல என்பதால், அந்த மாநிலத்திலிருந்து வருபவர்களினால் நோய் பரவும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார். மேலும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அதிக எண்ணிக்கையில் சி.டி ஸ்கேன் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக பொதுமக்களுக்கு மருத்துவம் கிடைக்கிறது என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.