ETV Bharat / state

40 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அவலம்: கல்வியாளரின் கருத்து என்ன? - Engineering colleges

சென்னை: பொறியியல் படிப்பில் மூன்றாவது கட்ட பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 40 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாத நிலையும், 50 விழுக்காடு கல்லூரிகளில் 10 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன.

40 கல்லூரியில் ஒருவரும் சேராத அவலநிலை!
40 கல்லூரியில் ஒருவரும் சேராத அவலநிலை!
author img

By

Published : Oct 25, 2020, 2:53 PM IST

பி.இ., பி.டெக்., பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வில் ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. ஆனால் 1,12,406 தகுதிப்பெற்ற மாணவர்கள் உள்ளனர். மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க https://www.tneaonline.org இணையதளத்தின் மூலம் கலந்து கொள்ளலாம்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு 8ஆம் தேதி முதல் 16ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்விற்கு 1533 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 946 மாணவர்கள் மட்டும் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர். பொறியியல் படிப்பு மாணவர்களுக்கான பொதுக் கலந்தாய்வு அக்டோபர் 8ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையில் நடைபெற்று வருகின்றன. இந்த கலந்தாய்விற்கு 1,10, 873 மாணவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுக் கலந்தாய்வில் முதல் சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 199.75 முதல் 175 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 12,263 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10,200 மாணவர்கள் மட்டுமே கட்டணம் செலுத்தினர். இவர்களில் 7,510 மாணவர்கள் மட்டும் கலந்தாய்வில் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

இரண்டாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 174.75 முதல் 145.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 22,904 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 13,415 மாணவர்கள் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்து உறுதி செய்துள்ளனர். மூன்றாவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 145 முதல் 111 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 35,132 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 20, 999 மாணவர்கள் கல்லூரிகளில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்துள்ளனர்.

தொழிற்கல்வி மற்றும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வின் மூன்று கட்டங்கள் முடிவடைந்த நிலையில் 42,870 மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்துள்ளனர். 460 கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 63 ஆயிரம் இடங்களில் ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்கும் என தெரிகிறது.

நான்காவது சுற்றில் தரவரிசைப் பட்டியலில் 111.5 முதல் 77.5 வரையில் கட் ஆப் மதிப்பெண் பெற்ற 40,572 மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (அக். 25) மாலை 5 மணி வரையில் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். அவர்களுக்கு நாளை (அக்டோபர் 24) தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்படும்.

இது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறுகையில், “பொறியியல் படிப்பு மூன்றாம் கட்ட கலந்தாய்வில் கடந்த ஆண்டை விட அதிகளவில் மாணவர்கள் பங்கேற்காமல் உள்ளனர். கடந்த ஆண்டு 28.8 விழுக்காடு மாணவர்கள் பங்கேற்காத நிலையில் இந்த 40 விழுக்காடு மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 40 கல்லூரிகளில் மாணவர்கள் ஒருவரும் சேர இடங்களை தேர்வு செய்யவில்லை. மேலும் 72 கல்லூரிகளில் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களும், 173 கல்லூரிகளில் 5 விழுக்காட்டுக்கும் குறைவான இடங்களுமே நிரம்பியுள்ளன. 255 கல்லூரிகளில் 10 விழுக்காட்டுக்கும் கீழ் தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளன.

பொறியியல் கல்லூரியின் தரம், கல்வியின் தரம் குறைந்திருப்பது தான் இதற்கு காரணமாகும். தற்போது உள்ள கல்லூரிகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாத நிலை இல்லாத நிலை உள்ளது. பல கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள் இல்லாதது, கல்லூரிகளில் போதிய கட்டமைப்பு வசதியில்லாதது, மாணவர்களுக்கு படித்து முடிக்கின்றபோது வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தராதது போன்ற காரணங்கள் மாணவர்களிடையே பொறியியல் படிப்பின் மீதான ஆர்வத்தை குறைத்திருக்கிறது. நல்ல வேலை வாய்ப்பும் , தேர்ச்சி விகிதமும் இருந்தால் அந்தக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நன்றாக இருக்கும்” எனக் கூறினார்.

கல்வி ஆலோசகர், அஸ்வின்
அதுமட்டுமின்றி, பொறியியல் படிப்பில் மாணவர்க்ள சேர்க்கை குறைந்து வருவதால் ஏற்கனவே பல்வேறு கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு வரும் நிலையில், வரும்காலத்தில் மேலும் கல்லூரிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டும் எனக் கல்வியாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க..."நீதி மறுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் போராடுவேன்" - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.