வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டது.
நிவர் புயல் நேற்று (நவ.24) மாலை தீவிரப் புயலாக வலுப்பெற்று, மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே இன்று (நவ.25) மாலை தீவிர புயலாகக் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நிவர் புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகரித்துவருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மின் வயர்கள் தரை மூலமாகவும் குடியிருப்புப் பகுதிகளுக்குச் செல்வதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர் புயல் எதிரொலி: பேரிடர் மீட்பு குழு புதுச்சேரி வருகை