ETV Bharat / state

நிவர் புயல் : சென்னை துறைமுகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் - nivar cyclone precautions at chennai harbour

சென்னை : நிவர் புயல் காரணமாக சென்னை துறைமுகத்துக்கு 6ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

nivar cyclone precautions at chennai harbour

author img

By

Published : Nov 24, 2020, 9:57 PM IST

இதுதொடர்பாக சென்னை துறைமுக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நிவர் புயல் சென்னை அருகே கடக்கவுள்ளதால், சென்னை துறைமுகத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 6ஆம் எண் புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனையடுத்து, கப்பல்கள், துறைமுகங்களின் பாதுகாப்பு கருதி, சென்னை துறைமுகத்தில் இருந்த நான்கு சரக்குக் கப்பல்கள், ஆழ்கடல் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், கடலோரக் காவல் படை மற்றும் கடற்படைக்கு சொந்தமான சிறு கப்பல்கள் துறைமுகத்தில் உள்ள ஜவகர் படகுத்துறையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன.

புயலின் தீவிரத்தின் அடிப்படையில், துறைமுகங்களில் உள்ள கிரேன்கள், இதர சாதனங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரேன்கள் அனைத்தும் துறைமுகத்துக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்டெய்னர் லாரிகளை மாலை ஆறு மணிக்கு மேல் அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

துறைமுகத்துக்கு வெளியே நிற்கும் வாகனங்கள் உள்ளே வந்தவுடன், துறைமுகத்தின் கதவு மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... நிவர் புயல்: தமிழ்நாட்டில் சி.ஏ. தேர்வுகள் ஒத்திவைப்பு!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.