ETV Bharat / state

பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு பணியிடங்கள் - போலி சான்றிதழ் மூலம் சேர்ந்த வடமாநில இளைஞர்கள்

author img

By

Published : Apr 6, 2022, 1:15 PM IST

Updated : Apr 13, 2022, 12:20 PM IST

அஞ்சல் ஊழியர் பணி,  இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள தமிழ்நாடு பணியிடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Northerners joined  by issuing fake mark certificates in Tamilnadu posts in central government public sector undertakings போலி சான்றிதழ்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு பணியிடங்களில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்
Northerners joined by issuing fake mark certificates in Tamilnadu posts in central government public sector undertakingsபோலி சான்றிதழ்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாடு பணியிடங்களில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்

சென்னை: அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் தமிழ்நாடு பணியிடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சேர்ந்துள்ளனர். தபால் துறை சார்பில், கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர்.

மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில், 1,500க்கும் மேற்பட்டவர்கள், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை அளித்த சான்றிதழ்களைக் கொடுத்துள்ளனர். அதில், தமிழ்நாடு பணிக்குத் தேர்வானவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டபோது, 10 ஆம் வகுப்பு சான்றிதழ்களில், அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

போலி சான்றிதழ்கள் மூலம் பொதுத்துறை நிறுவனங்களில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்

மேலும், சான்றிதழ்களில் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, அந்த சான்றிதழில், முதல் மொழி பாடமாக ஹிந்தி இடம் பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு சான்றிதழில் சம்பந்தப்பட்ட மாணவர் ஹிந்தியில் கையெழுத்திட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் முத்திரையுடன், பள்ளிக் கல்வித் துறைக்குப் பல வகைகளில் பெயர்கள் வைக்கப்பட்டு இருந்து இருக்கிறது.

அதில்,'ஸ்டேட் கவர்ன்மென்ட் போர்டு ஆப் தமிழ்நாடு, ஸ்டேட் போர்டு ஆப் எக்சாமினேஷன்ஸ், போர்டு ஆப் ஹையர் செகண்டரி எக்சாமினேஷன்ஸ்' உள்ளிட்ட ஐந்து பெயர்கள், அந்த சான்றிதழ்களில் அச்சிடப்பட்டு இருந்து இருக்கிறது. மேலும், தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் என்ற பெயரில், www.tamilnadustateboard.org/ என்ற பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால், அது போலியானது என்று தெரியவந்துள்ளது.

போலி சான்றிதழ்கள்
போலி சான்றிதழ்கள்

இதனிடையே, மாணவர்கள் படித்த பள்ளிகளை பொறுத்தவரை, 'சென்னை செகண்டரி பப்ளிக் ஸ்கூல், சென்னை சீனியர் ஸ்கூல்' என, கற்பனையான பெயர்கள், சான்றிதழில் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து, இந்த சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்துமாறு பள்ளிக் கல்வித் துறையிடம் உரிய அறிக்கை தருமாறு தபால் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது.

பள்ளிக் கல்வித் துறை விசாரணை
பள்ளிக் கல்வித் துறை விசாரணை

இவ்வளவு குளறுபடிகளுடன் போலியாக தயாரிக்கப்பட்ட, 10 ஆம் வகுப்பு சான்றிதழ்களைக் கொடுத்து, தபால் துறையில் நூற்றுக்கணக்கானவர்கள் சேர்ந்துள்ளதாக, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே, பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஏராளமானோர், போலி பள்ளி சான்றிதழ்களை அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

விசாரணையில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்து வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்துள்ளதை அரசு தேர்வு துறை கண்டுபிடித்தது. இதனையடுத்து, போலி சான்றிதழ் கொடுத்த நபர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவும், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவும் அரசு தேர்வுகள் துறை பரிந்துரை செய்துள்ளது.

தமிழ்நாடு பணியிடங்களில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்

மேலும், அஞ்சல் ஊழியர் பணி, சிஆர்பிஎஃப், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல மத்திய அரசின் நிறுவனங்களில் உள்ள தமிழ்நாடு பணியிடங்களில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 200க்கும் அதிகமானோர் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நிர்மலா சீதாராமன் கூறியதாக வெளியான போலியான செய்தி.. நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்

Last Updated : Apr 13, 2022, 12:20 PM IST

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.