ETV Bharat / state

‘செங்கோலில் இந்துக் கடவுள்கள்.. பிற மதத்தினர் ஏற்றுக் கொள்வார்களா?’ - நிர்மலா சீதாராமனின் விளக்கம் என்ன? - நிர்மலா சீதாராமன்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைக்கப்படவுள்ள செங்கோலில் இந்து கடவுள்கள்களின் உருவங்கள் இருப்பதால் பிற மத்திதனர் ஏற்றுக்கொள்வார்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமான் விளக்கமளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 25, 2023, 5:58 PM IST

சென்னை ஆளுநர் மாளிகையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன். ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா குறித்த செய்தியாளர் சந்திப்பு

அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இந்தியா விடுதலை அடைந்தபோது மவுண்ட் பேட்டன் அவர்களால் திருவாவடுதுரை ஆதினம் மூலம் ஜவஹர்லால் நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில், பேரவை தலைவர் இருக்கையின் பின்புறம் வைக்க இருப்பது குறித்து விளக்கம் அளித்தார்.

அப்போது, தற்போது அலகாபாத்தில் உள்ள ஆனந்தபவன் அருங்காட்சியகத்தில் உள்ள செங்கோல் 20 ஆதினங்கள் மூலம் நாடாளுமன்றத்தில் வைக்கப்படும் என்றார். பின்னர், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், “28 ஆம் தேதி பிரதமர் திறக்க உள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் பங்கேற்பது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வெள்ளையர்களுக்கும், நம் மக்களுக்குமான ஆளுமைப் பரிமாற்றத்தை எடுத்துக்காட்டிய நிகழ்ச்சிதான் பிரதமருக்கும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் இடையிலான செங்கோல் பரிமாற்றம். இரவு 10.30 முதல் 12 மணிக்குள் நடந்த பரிமாறுதல் அது. இந்தியாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளிலும் ஆளுமை பரிமாறுதல் பாரம்பரியப்படியே நடந்துள்ளது.

வெள்ளையர்கள் கூட அவர்கள் நாட்டில் பழைய பாணியிலேயே ஆட்சி பரிமாறுதலை நடத்துகின்றனர். அந்த நாடும் ஜனநாயக நாடுதான். ராஜாஜி தமிழ்நாட்டில் இருந்த ஆதினங்கள் பலருடன் ஆலோசித்து 'தர்ம தண்டம்' எனும் செங்கோலை திருவாவடுதுறை ஆதினத்திடம் இருந்து பெற்றார். செங்கோலை உருவாக்கிய உம்மிடி பங்காரு நகைக்கடைக்காரர்களை 28 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மரியாதை செய்வார். மேலும் 2021 பிப்ரவரியில் அந்த செங்கோல் குறித்து பத்மா சுப்பிரமணியன் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதினங்கள் பங்கேற்று செங்கோலை வழங்க உள்ளனர். திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், வேளக்குறிச்சி, மதுரை, சூரியனார் கோயில், காமாட்சிபுரம், பேரூர், சிரவை, அவிநாசி, குன்றக்குடி, கோயிலூர், பத்திரக்குடி, பழனி, மயிலம், தொழுவூர், திண்டுக்கல் ஆதீனங்கள் உள்பட 20 ஆதீனங்கள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளனர்.

நீதி, நியாயம், சமத்துவ ஆட்சிக்கான ஆசிர்வாதிக்கப்பட்ட அந்த செங்கோல் நாடாளுமன்றத்தில் மக்களவையில் சபாநாயகர் இருக்கையின் அருகே வைக்கப்பட உள்ளது. பிரயாக்ராஜ் அருங்காட்சியகத்தில் அந்த செங்கோல் இருந்த விவரம் பலருக்கு தெரியாமல் இருந்தது. 1978ஆம் ஆண்டில் காஞ்சி பெரியவர் செங்கோல் குறித்து பேசியிருக்கிறார். அதன் பிறகு ஊடகங்களில் அது குறித்த செய்தி வந்தது. 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் பத்மா சுப்பிரமணியம் பிரதமருக்கு செங்கோல் குறித்து கடிதம் எழுதினார்.

தமிழ்நாடு மக்கள் அனைவரும் பெருமிதம் அடையும் வகையில் இது அமைந்துள்ளது. நாடாளுமன்ற கட்டட விசயத்தில் அரசியல் செய்வதற்கான தேவை எங்களுக்கு இல்லை். நாடாளுமன்றம் ஐனநாயகத்தின் கோயில். அந்த கோயிலுக்கான மரியாதையை அனைத்து கட்சிகளும் கொடுக்க வேண்டும். அதை புறக்கணிப்பது நல்லதல்ல. எதிர்கட்சிகள் தங்களது நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆலோசிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

மதுரை மீனாட்சி அம்மன் பங்குனி உற்சவத்தின்போது தர்ம தண்டம் எனும் செங்கோல் மீனாட்சி அம்மனுக்கு வழங்கப்படும். செங்கோல் பரிமாற்றிக் கொள்வது நமது கலாச்சாரம். மேலும் செங்கோல் குறித்து திருக்குறளில் தனி அதிகாரமே உள்ளது. செங்கோல் மத அடையாளம் இல்லை” என கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறந்து வைக்க குடியரசுத் தலைவரை ஏன் அழைக்கவில்லை என்று கேட்கிறீர்கள். சட்டீஸ்கர் சட்டப்பேரவைக்கான புதிய கட்டடத்தை ஏன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார் என கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் என்பதால் குடியரசு தலைவரை வைத்து நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பும் யாரும் அப்போது சட்டப்பேரவைக்கு தலைவர் ஆளுநர் தானே என கேள்வி கேட்கவில்லை என்றார்.

செங்கோலில் நந்திகேஸ்வரர், மகாலட்சுமி போன்ற இந்துக் கடவுளின் உருவங்கள் இருப்பதால் பிற மதத்தினர் ஏற்றுக் கொள்வார்களா என்ற கேள்விக்கு, “அந்த செங்கோல் நேரு கையில் கொடுக்கப்பட்டது. அவரும் அதை வாங்கி கொண்டர் என்பதை இங்கு குறிப்பிடுகிறேன். இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்திலும் சரி , இப்போதும் சரி, எல்லா மக்களும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள் செங்கோல் நமது கலாச்சாரம், பாரம்பரியத்தின் தொடர்பை பற்றி பேசுகிறது” என பதில் அளித்தார்.

மேலும், “இந்தோனேசிய நாடு உலகில் இஸ்லாமியர் அதிகம் வாழும் நாடு. ஆனால், அங்குள்ள ரூபாய் தாள்களில் விக்னேஷ்வரர், லட்சுமி படங்கள் இருக்கும் , அந்த நாட்டில் குபேரனை வழிபடுகின்றனர். விஷ்ணு உள்ளிட்ட இந்து கடவுள் சிலைகள் அந்த நாட்டில் இருக்கின்றன. அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகத்தில் பஞ்ச பாண்டவர்களின் பெயர்கள் உள்ளன” என தெரிவித்தார்.

செங்கோல் நமது நாட்டின் கலாச்சார அடையாளம் என்பதால் அது பிற மதத்தினருக்கு மனக்குறையை ஏற்படுத்தாது. அரசியல் ரீதியாக கேள்வி எழுப்ப மட்டுமே இதுபோன்ற விசயங்கள் உதவும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை, “தெலங்கானா மாநிலத்தில் புதிய தலைமைச் செயலக கட்டடத்தை முதலமைச்தர் தான் திறந்த வைத்தார். மாநில ஆளுநரான எனக்கு அழைப்பு கூட கொடுக்கப்படவில்லை. குடியரசுத் தலைவர் போலவே ஆளுநர்களும் அரசியல் சார்பு இல்லாதவர்தான் என யாரும் கூறுவதில்லையே ஏன்?” என கேள்வி எழுப்பினார்

இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பீட்டில் திருச்சியில் ஐடி பார்க்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.