மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்
ஒன்றிய அரசைக் கண்டித்து இன்று மின்வாரிய ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இடி மின்னலுடன் கூடிய கன மழை
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும்.
ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் - புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரம் கணக்கெடுப்பு
சென்னையில் பள்ளி செல்லாதோர், பள்ளியில் இருந்து இடைநின்றோர், மாற்றுத்திறனுடையோர், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர், கரோனாவால் பெற்றோரை இழந்தோர் என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில், குழந்தைகளின் விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி இன்றுமுதல் ஆகஸ்ட் 31 வரையில் நடைபெற இருக்கிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.
உலக சிங்க தினம்
'காட்டின் ராஜா' என்று அழைக்கப்படும் சிங்கங்களுக்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரத்யேக தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. உலகில் 30 ஆயிரம் வரை இருந்த சிங்க இனம், தற்போது 10 ஆயிரம் மட்டுமே எஞ்சியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பத்ம ஸ்ரீ வினோத் துவா மீதான தேச துரோக வழக்கு - இன்று இறுதிகட்ட விசாரணை
மத்திய அரசை விமர்சிக்கும் யூ-ட்யூப் காணொலிக்காக தன் மீது பதியப்பட்ட தேச துரோக வழக்கை ரத்துசெய்ய கோரி ஊடகவியலாளர் பத்ம ஸ்ரீ வினோத் துவா தொடுத்த மனு மீதான இறுதிகட்ட விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.