1.பிகாரின் முதலமைச்சர் யார்? - பாஜக கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்
பிகாரில் வெற்றிபெற்றதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதலமைச்சராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்ற முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
2.வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடக்கம்!
புதுச்சேரியில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் செய்யும் பணி இன்றிலிருந்து தொடங்கப்படுகிறது.
3. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
திருநெல்வேலி, தூத்துக்குடி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
4. திருச்செந்தூரில் தொடங்கும் கந்தசஷ்டி திருவிழா!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் தொடங்குகிறது.