மனுஸ்மிருதி தடை:
மனுஸ்மிருதி எனும் சனாதன நூலை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
திமுக ஆர்ப்பாட்டம்:
மருத்துவக் கல்வியில் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநரை கண்டித்தும், அதிமுக அரசை கண்டித்தும் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.
குஜராத்தில் மூன்று திட்டங்களை தொடங்கி வைக்கும் மோடி:
விவசாயிகளுக்கான ’கிசான் சூர்யோதய் யோஜனா’ உள்ளிட்ட மூன்று திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 24) தொடங்கி வைக்கிறார்.
உலக கைத்தறி தினம்:
இன்று உலக கைத்தறி தினம், நெசவுத் தொழிலாளர்களை நினைவுகூரும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
டிஆர்பி ஊழல் வழக்கு - ஆஜராகிறார் அர்னாப்:
டிஆர்பி ஊழல் வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் டிவியின் தலைமை செய்தியாசிரியர் அர்னாப் கோஸ்வாமி இன்று மும்பை போலீஸ் முன்னிலையில் ஆஜராகவுள்ளார்.