ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

ETVBharatNewsToday
இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு
author img

By

Published : Jul 1, 2020, 7:52 AM IST

  • மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மாவட்டங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்து இன்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

News today - July 01
மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்
  • ஊதிய விவகாரம்: அரசுக்கு எதிராகப் போராட்டம்

கரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.

News today - July 01
ஊதிய விவகாரம்: அரசுக்கு எதிராகப் போராட்டம்
  • மருத்துவர்கள் தினம்: பொது விடுமுறை அறிவித்து மம்தா உத்தரவு

நாடு முழுவதும் தன்னலம் கருதாமல் சேவையாற்றி வரும் மருத்துவர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஜூலை 1ஆம் தேதி மருத்துவர்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு கூடுதல் மரியாதை செலுத்தும் விதமாக, மருத்துவர்கள் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

News today - July 01
மருத்துவர்கள் தினம்: பொது விடுமுறை அறிவித்து மம்தா உத்தரவு
  • ஐக்கிய அரபு அமீரகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் மசூதி, சர்ச் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் இன்று முதல் திறக்கப்பட உள்ளன. இதுவரையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 48 ஆயிரத்து 246 பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில், 37 ஆயிரம் பேர் குணமாகியுள்ளனர். 314 பேர் உயிரிழந்துள்ளனர்.

News today - July 01
ஐக்கிய அரபு அமீரகத்தில் வழிபாட்டுத் தலங்கள் திறப்பு
  • நாடு தாழுவிய ஊரடங்கு: இரண்டாம் கட்ட தளர்வுகள் இன்றிலிருந்து அமல்

நாடு தழுவிய ஊரடங்கில் இரண்டாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி இரவு நேர ஊரடங்கானது இரவு 10 மணி முதல் 5 மணி வரை நீடிக்கும். மாநிலங்களுக்கு இடையே செல்வதற்கும், சரக்கு போக்குவரத்து மேற்கொள்வதற்கும் தடையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News today - July 01
நாடு தாழுவிய ஊரடங்கு: இரண்டாம் கட்ட தளர்வுகள் இன்றிலிருந்து அமல்
  • சென்னை, மதுரையில் புதிய காவல் ஆணையர் பொறுப்பு

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் காவல் ஆணையரான ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாட்டின் செயலாக்க பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய காவல் ஆணையராக பிரேமானந்த் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News today - July 01
சென்னை, மதுரையில் புதிய காவல் ஆணையர் பொறுப்பு
  • ஜகமே தந்திரம் புதிய அப்டேட்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழுவினர் இன்று காலை 9 மணிக்கு வெளியிடுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.