புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் வளர்ந்து வரும் தொழில் முனைவோர்கள் உள்ளிட்டோருக்கு இரண்டு திட்டங்களின் கீழ் 25 கோடி ரூபாய் அளவுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மெகா கண்டுபிடிப்பு சவால் என்ற திட்டத்தின் கீழ் 10 நபர்களுக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் நிதியுதவியும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தின்கீழ் (innovation voucher programme) ஆயிரம் பயனாளிகளுக்கு, தலா இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை நிதியுதவியும் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மெகா கண்டுபிடிப்பு சவாலுக்கு, மே 29ஆம் தேதிக்குள் www.tnigc.in என்ற இணையதளத்திலும், புத்தாக்க பற்றுச்சீட்டு திட்ட நிதியுதவியைப் பெற https://www.editn.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 15ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.