சென்னை: கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக, சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஆண்டு சில கட்டுபாடுகளுடன் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது.
மெரினா கடற்கரையில் மணல் பகுதிகளுக்கு யார் செல்லக்கூடாது என்று மாநகர காவல் துறை அறியுறுத்தியிருந்தனர். மாநகர காவல் துறை சார்பாக கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. அதில் குறிப்பாக இரவு 8 மணிக்கு மேல் மேம்பாலங்கள் மூடப்பட்டன.
சென்னை மாநகர் முழுவதும் 20 ஆயிரம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை மாநகர் முழுவதும் 368 இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். கடற்கரை சாலைகளில் காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டதுடன் உயர் கோபுரங்களில் கண்காணிப்பு கேமரா உதவியுடன் பாதுகாப்பை பலப்படுத்திருந்தனர்.
கடந்த காலங்களில் புத்தாண்டில் அதிகளவிலான விபத்துக்கள் நடைபெற்றதை தொடர்ந்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், காவல்துறையினர் கட்டுப்பாட்டை மீறி எதாவது அசம்பாவிதம் நிகழும் பட்சத்தில் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
காமராஜர் சாலையில் 2023ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று சிறிது நேரத்தில் காவல் துறை அதிகாரிகள் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் happy new year என கோஷங்கள் எழுப்பியபடி பொதுமக்கள் தங்களது இல்லங்களுக்கு சென்றனர். காவல்துறையினரின் கட்டுபாடு காரணமாக குறைந்த அளவில் பொதுமக்கள் கூடியிருந்தாலும் 2023ஆம் ஆண்டு புது வருடத்தை உற்சாகமாக வரவேற்றனர். மெரினாவின் மணல் பகுதியில் அனுமதி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தாலும் விபத்துகளை தடுப்பதற்காக காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
இதையும் படிங்க: New year 2023: பிறந்தது புத்தாண்டு; வாணவேடிக்கைகள் மக்கள் உற்சாகம்!