ETV Bharat / state

கரோனா: செவிலியர்களுக்கு உதவும் புதிய கருவி! - covid-19 latest

சென்னை: கரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கு உதவும் வகையில் புதிய கருவியை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்தினர் தயார் செய்துள்ளனர்.

new-tool-for-corona-nurses
new-tool-for-corona-nurses
author img

By

Published : Apr 16, 2020, 3:23 PM IST

Updated : Apr 16, 2020, 7:52 PM IST

கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். மேலும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி அளித்துவரும் செவிலியர்களுக்கு உதவும் புதிய கருவியை சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தினர் தயார் செய்துள்ளனர். மேலும், இக்கருவியை வடிவமைத்த விக்னேஷ்வரன் கூறும்போது, மருத்துவப் பணியில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் செவிலியர்கள், மருத்துவர்கள் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடமிருந்து செவிலியர்களுக்கு முடிந்த அளவில் பாதுகாப்பு அவசியமானதாகும். அவ்வப்போது நோயாளிகளின் நலனில் முன்னேற்றம் உள்ளதா? என தெரிந்து கொள்ள நோயாளிகளின் அறைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில், இக்கருவியை பயன்படுத்தலாம்.

நோயாளிகள் தங்கள் இருப்பிடத்திலேயே இருந்து செவிலியர்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் அவ்வப்போது அவர்களின் தேவைகளுக்கு மட்டுமே செவிலியர்கள் சென்று உதவலாம்.

இந்த கருவி மருத்துவமனையில் உள்ள அனைத்து படுக்கைகளையும் இணைக்கும் வயர்லெஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை ஒரு முறை அழுத்துவதால் மருந்துகள், இரண்டு முறை அழுத்துவதால் தண்ணீர், உணவு, மூன்று முறை அழுத்துவதன் மூலம் அவசர உதவி என நோய் தோற்று உள்ளவர்கள் சுலபமாக அவர்களின் தேவையின் போது செவிலியர்களுக்கு அழைப்பு விடுக்கலாம்.

கரோனா செவிலியர்களுக்கு உதவும் புதிய கருவி

இதற்கான கருவியை தனிமைப்படுத்தப்பட்ட அறையில் உள்ளவரின் கையில் அளித்து விட்டால், அவர் தேவைப்படும் போது செவிலியரை அழைத்து சிகிச்சை பெற முடியும். மேலும் ஒரு கருவியின் மூலம் பலருக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:கரோனாவிலிருந்து விரைவில் விடுபட சிறப்பு வழிபாடு!

Last Updated : Apr 16, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.