ETV Bharat / state

தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்!

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் தவிர பிற கடைகள் திறக்க அனுமதி இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : May 5, 2021, 6:32 PM IST

புதிய கட்டுப்பாடுகள்:

  • மளிகை, காய்கறிகடைகள் மற்றும் இதர அனைத்து கடைகளும் உரிய வழிமுறைகளை பின்பற்றி நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி
  • வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.
  • தனியாக செயல்படுகின்ற மளிகை உட்பட பலசரக்குகள், காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 % வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி. மற்ற அனைத்து கடைகளும் திறக்க அனுமதி இல்லை.
  • சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்க அனுமதி இல்லை.
  • அனைத்து உணவகங்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படும். உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை.
  • தேனீர் கடைகள் மதியம் 12 மணிவரை மட்டுமே செயல்பட அனுமதி உண்டு.
  • விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.
  • அனைத்து மின் வணிக சேவைகள் வரையறுக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.
  • திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது. இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
  • அனைத்து மீன், இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணிவரை செயல்பட அனுமதி உண்டு. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் மற்றும் இறைச்சி கடைகள் திறக்க அனுமதியில்லை.
  • சுமார் 3000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய கடைகளுக்கு தடை
  • கொடைக்கானல், ஊட்டி, மெரினா கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பொதுமக்கள் பார்வையிட தடை
  • அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், கேளிக்கைக் கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க தடை
  • அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் மட்டும் பணி செய்ய அனுமதி
  • பயணியர் இரயில், மெட்ரோ ரயில், அரசு பேருந்து, தனியார் பேருந்து ஆகியவற்றில் 50% பயணிகள் மட்டுமே அனுமதி
  • இரவு நேர ஊரடங்கு 10 மணி முதல் காலை 4 மணிவரை உண்டு. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் முழு ஊரடங்கு.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.