ETV Bharat / state

புதிய கல்விக் கொள்கை: 'எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசு' - DMK Critize ADMK

சென்னை: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கேள்வி கேட்காமல் எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்கு துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா அதிமுக அரசு என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய தேசிய கொள்கை : எம்ஜிஆர்- ஜெயல லிதாவுக்கு துரோகம் செய்யும் அதிமுக அரசு - ஸ்டாலின்

author img

By

Published : Aug 1, 2020, 3:19 AM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் எதேச்சதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் செயல்படும் மத்திய அரசு, திட்டமிட்டு பல்வேறு உள்நோக்கங்களுடன் திணிக்கின்ற புதிய கல்விக் கொள்கை என்பது, மாநில உரிமைகளுக்கும், சமூகநீதிக்கும், இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் எதிராக இருப்பதுடன், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தையும் கடும் நெருக்கடி இருளில் தள்ளும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதனை திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து கண்டனத்தை உறுதியாகப் பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு அமைதி காப்பது, தமிழ்நாட்டில் நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் ஆபத்தை விளைவிப்பதாகும்.

குறிப்பாக, புதிய கல்விக் கொள்கையில் பேரறிஞர் அண்ணாவின் இருமொழித் திட்டத்திற்கு மாறாக, வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கை பற்றி அதிமுக அரசு உடனே மௌனம் கலைத்தாக வேண்டும்.

கட்சியின் பெயரில் பெருந்தகை அண்ணாவின் பெயரை வைத்துக் கொண்டு எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கூட தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்தி ஆதிக்கத்திற்கு இடம்தராமல் இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடித்துவந்த நிலையில், அவர்களுக்கும் சேர்த்தே துரோகம் செய்யத் துணிந்துவிட்டதா இன்றைய அதிமுக அரசு?" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.