ETV Bharat / state

தமிழ்நாட்டில் பணிபுரிவது பெருமையாக உள்ளது: நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!

சென்னை: இலக்கியம், கலாசாரம், பாரம்பரியங்களில் தனித் தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் தான் ஒரு சேவகனாக பணிபுரிய இருப்பது தனக்கு பெருமையாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி சஞ்சீப் பானர்ஜி  நீதிபதி சஞ்சீப் பானர்ஜி வரவேற்பு நிகழ்ச்சி  சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி!  Judge Sanjeeb Banerjee  New madras Highcourt CJ Sanjeeb Banerjee welcome ceremony  CJ Sanjeeb Banerjee welcome ceremony
CJ Sanjeeb Banerjee welcome ceremony
author img

By

Published : Jan 4, 2021, 2:57 PM IST

சென்னை உயர் நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக்கொண்ட நீதிபதி சஞ்சீப் பானர்ஜிக்கு உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தலைமை நீதிபதியை தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வரவேற்றார்.

அப்போது விஜய் நாராயன் பேசுகையில், "கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது சமூக அக்கறையும், குடிமக்களின் உரிமையை நிலை நாட்டும் வகையிலும் பல தீர்ப்புகளை அவர் வழங்கியுள்ளார். அவரது தீர்ப்புகளில் அரசு மதசார்பற்றதாக இருக்க வேண்டும். காளி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகளில் பட்டாசு வெடிப்பதால் பலனில்லை, மாற்றாக மெழுகு தீபம் ஏற்றலாம் என உத்தரவிட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

காளி பூஜை தடை

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசுகையில், "கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக காளி பூஜையை தடை செய்தவர். கரோனா விதிகளால் கீழமை நீதிமன்றங்களை சார்ந்த வழக்கறிஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதைக் கருத்தில் கொண்டு ஜனவரி 18ஆம் தேதி முதல் அவற்றை திறக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

அதேபோல், கீழமை நீதிமன்றங்களிலும் முழுவதுமாக நேரடி விசாரணை தொடங்க வேண்டும், வழக்கறிஞர்களின் அறைகளை திறக்க வேண்டும்" கோரிக்கை வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவர் ஜி. மோகனகிருஷ்ணன், "காணொலி மூலமான விசாரணை என்பது நேரடி விசாரணைக்கு ஈடாகாது" என்றார்.

விரைவில் தீர்ப்பு

மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் பேசுகையில், "விசாரணைகள் முடிந்த சில நாள்களிலேயே தீர்ப்புகளை வழங்குபவர். ஏற்கனவே இரண்டு நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பும் வாய்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் இழந்துள்ளது. தற்போது புதிய தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை அங்கு அனுப்புவதன் மூலம் மீண்டும் அந்த பெருமையை அடையும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து, பெண் வழக்கறிஞர் சங்க தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோர் வரவேற்றும் பேசினர். இதைத் தொடர்ந்து, ஏற்புரை ஆற்றிய தலைமை நீதிபதி சஞ்சீப், வணக்கம் என கூறி தனது உரையை தமிழில் தொடங்கினார். "திருவள்ளுவர் பிறந்த மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. நாட்டிலேயே ஒரு மொழியின் பெயரை கொண்டுள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடுதான்.

பெருமை

தொன்மையான மொழி தமிழ், இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடு பெருமையோடும் பேசி வருகின்றனர். பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலிருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது.

வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை. இசை, பாரம்பரியம், நடனம், இலக்கியம், கலாசாரம் என அனைத்திலும் தனித்தன்மையோடு சிறந்து விளங்கும் தமிழ்நாடு என்னுடைய மாநிலம். இந்த மாநிலத்தில் நான் ஒரு சேவகன்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.