ETV Bharat / state

JEE தேர்வு மற்றும் IIT குறித்து அறிய புதிய வசதி

ஐஐடி குறித்து அதன் முன்னாள் மாணவர்கள் தொடங்கி உள்ள AskIITM.com என்ற இணையதளத்தின் மூலம் பதிலளிக்க உள்ளனர். மேலும் ஜேஇஇ தேர்வு எழுதுவோரும் கருத்தரங்கில் இயக்குநர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை கேட்டுத்தெரிந்து கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

JEE தேர்வு மற்றும் IIT குறித்து முன்னாள் மாணவர்கள் அறிய புதிய வசதி கண்டுபிடிப்பு

author img

By

Published : Aug 26, 2022, 7:04 PM IST

சென்னை: ஐஐடியில் சேர விரும்புவோர் நேரடியாக அணுகும் வகையில், வேலைவாய்ப்பு, ஆசிரியர்கள், கல்வியாளர்கள் தொடங்கி வளாக வசதிகள் வரை சென்னை ஐஐடி தொடர்பான அனைத்துக் கேள்விகளையும் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு பதில்களைப் பெறலாம்.

ஐஐடியில் சேர விரும்புவோருக்கு உதவும் நோக்கத்தில் முன்னாள் மாணவர்களின் முன்முயற்சியாக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் –www.askiitm.com– என்ற இணையதளத்தில் ஏற்கெனவே இடம்பெற்று இருக்கும் கேள்விகளையோ அல்லது தாங்கள் விரும்பும் கேள்விகளையோ பதிவிடலாம். இதில் வழக்கமாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் இடம்பெற்றுள்ளன.

சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறும்போது, "விருப்பமுடைய மாணவர்கள் சமூக வலைதளங்களுக்குச்சென்று தகவல்களைத்தேடுகின்றனர். ஆனால், அங்கு கிடைக்கும் தகவல்களோ குழப்பத்தையே ஏற்படுத்துகின்றன. நம்பகமான தகவலைப்பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சிறந்த இக்கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவர்கள் AskIITM மூலம் ஆர்வமுடன் பதில் அளிப்பது மகிழ்ச்சி தருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்துக்கல்வி நிலையங்களுக்கும் இது ஒரு தொடக்கப்பயணமாக அமையும்.

இக்கல்வி நிறுவனம் தொடர்பான கேள்விகளை எவரும் கேட்க இணையதளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவால் அந்த கேள்விகளுக்கு 48 மணி நேரத்தில் பதில் அளிக்கப்படும். கேள்வி கேட்போருக்கான பதில் இமெயில் மூலமோ, வாட்ஸ்அப் வாயிலாகவோ அல்லது இரண்டிலுமோ வழங்கப்படும். பிற மாணவர்கள் பயனடையும் வகையில் இணையதளத்திலும் அக்கேள்விகள் இடம்பெறும்.

AskIITM-யின் ஒரு முயற்சியாக, சென்னை, ஹைதராபாத், விஜயவாடா ஆகிய நகரங்களில் செப்டம்பர் 2-ஆம் தேதி முதல் 4-ஆம் தேதி வரை கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதுவோர் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இயக்குநர் அல்லது முன்னாள் மாணவர்களிடம் கேள்விகளை எழுப்பலாம்.

செப்டம்பர் 10, 11ஆகிய தேதிகளில், கல்வி நிறுவன வளாகம் மற்றும் பல்வேறு துறைகளை வீடியோ கான்பெரன்சிங் முறையில் காணமுடியும். வரவிருக்கும் நிகழ்வுகள் தொடர்பாகவும் மேலும் விவரங்களையும் https://www.askiitm.com/events இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வெள்ளிக்கிழமை தொழுகையை அமைதியாக நடத்துங்கள் - ஓவைசி வேண்டுகோள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.