ETV Bharat / state

'வீட்டு வரியை முறைப்படுத்த புதிய குழு' - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி - வீட்டு வரி

சென்னை: வீட்டு வரியை முறைப்படுத்த புதிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

வேலுமணி
author img

By

Published : Jul 8, 2019, 9:05 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், "வீட்டு வரி விதிக்கும்போது ஒவ்வொரு வீட்டிற்கும் மாறுபட்ட விழுக்காட்டில் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சிலருக்கு 500% வரை வீட்டு வரியானது உயர்த்தப்பட்டுள்ளது" என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, "வீட்டுவசதி வரியை முறைப்படுத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் வீட்டு வரியானது மாற்றி அமைக்கப்படும்" என்றார்.

பின்னர், சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு செலாக்க திட்ட துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில், "மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை ரூ.5490.75 கோடி மதிப்பில் 37.30 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2017 -18, 2018 -19 மற்றும் 2019 -20 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு உத்தேசமாக 15.53 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் ரூ.1362.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்று சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:Body:மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க இந்த நிதியாண்டில் 1362.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று ஊரக வளர்ச்சி துறை மற்றும் சிறப்பு செலாக்க திட்ட துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் 2011 -12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை ரூ. 5490.75 கோடி மதிப்பில் 37.30 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 2017 -18, 2018 -19 மற்றும் 2019 -20 ஆம் ஆண்டுகளில் மாணவர்களுக்கு உத்தேசமாக 15.53 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில் 1362.27 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு திட்ட செயலாக்க துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.