தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமானது நீர், காற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய முக்கிய சட்டங்களையும் அவற்றின் கீழ் அடங்கியுள்ள விதிகளையும் செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டுள்ள இந்த வாரியத்தில் எட்டு மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் எட்டு மாவட்ட ஆய்வகங்களும் செயல்படுகின்றன. இந்த வாரியத்தின் புதிய தலைவராக ஓய்வுபெற்ற வனத் துறை அலுவலர் வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனத் துறை முதன்மைச்செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர், உறுப்பினர் தேர்வு விதிகளுக்குள்பட்டு வெங்கடாசலம் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு வருடத்திற்கு இவர் இந்தப் பதவியில் அவர் இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.