ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய வசதி - புதிய அறிவிப்புகள் - digital services

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பு

author img

By

Published : Apr 1, 2023, 5:23 PM IST

தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூ.184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்புகள் பின்வருமாறு.

*சோழிங்கநல்லூர் எல்கோசெஸ்- இல் உலகத்தரம் வாய்ந்த பசுமைப் பூங்கா ரூ 20 கோடி செலவினத்தில் அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

* எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், பசுமை தகவல் தொழில்நுட்ப பூங்காக்களாக சர்வதேச தரத்தில் மாற்ற ரூபாய் 40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* அசைவூட்டப் படம், காட்சி வெளிப்பாடு, வேடிக்கையான விளையாட்டு மற்றும் விரிவாக்கப்பட்ட மெய்நிகர் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிடும்.

* இடைமுக பயன்பாட்டு நிரலி நுழைவாயில் மூலம் பொது மக்களுக்கு அரசின் சேவைகளை உயர்ந்த தரத்துடன் விரைவாக வழங்க வழிவகை செய்யப்படும்.

* தமிழ்நாடு நலத்திட்ட பயனாளிகளுக்கான நேரடி பயன் பரிமாற்ற தளம் உருவாக்கப்படும்.

* தமிழ்நாடு இணையவழி அரசு சேவைகளுக்கான ஒற்றை நுழைவுத்தளம் ரூபாய் 11 கோடி செலவில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையும் வருவாய் பங்கிட்டிலியிருந்து செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

* தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்கப்படும்.

* 100 புதிய சேவைகளை இ-சேவை மற்றும் மக்கள் சேவை தளத்தில் ரூபாய் 120 லட்சம் செலவினத்தில் வழங்கப்படும்.

* மாநில முழுவதும் உள்ள அரசு அலுவலங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்க ரூபாய் 184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

* மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில், நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூபாய் 100 கோடி செலவினத்தில், அரசு பொது சந்தை நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

* தமிழ்நாடு தொழில்நுட்ப மையம் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.

* ஆசிரியர்களுக்கான பயிற்சி அளிக்கும் நோக்கில் துறைகளுக்கான சீர்மிகு மையம், ரூபாய் 10 கோடி செலவினத்தில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பவியல் நிறுவனத்தின் சொந்த நிதியிலிருந்து இந்த மையம் அமைக்கப்படும்.

* இணைய பாதுகாப்பு 2.0 மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளை உள்ளடக்கிய வகையில் இக்கொள்கை புதுப்பிக்கப்படும்.

இதையும் படிங்க: குப்பைகளில் இருந்து புதிய முறையில் வருமானம்.. தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அசத்தல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.