ETV Bharat / state

"தேசிய கல்விக்கொள்கை ஒன்றரை ஆண்டுகளில் அமல்படுத்தப்படும்" - மத்திய பள்ளிக்கல்வி செயலாளர்! - மத்திய பள்ளிக்கல்வி செயலாளர்

தேசிய கல்விக் கொள்கை இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் அமல்படுத்தப்படும் என்றும், அதற்கான குறிப்பிட்ட தேர்வு முறை இரண்டு வருடத்திற்குள்ளாக அமலுக்கு வரும் என்றும் மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

NEP
NEP
author img

By

Published : Jan 31, 2023, 9:45 PM IST

சென்னை: ஜி20 நாடுகளின் கல்வி கருத்தரங்கம் சென்னை ஐ.ஐ.டி.யில் இன்று(ஜன.31) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய உயர் கல்வித்துறை செயலர் சஞ்சய் மூர்த்தி மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

மத்திய உயர்கல்வி துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி கூறுகையில், "கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. குறிப்பாக பள்ளிக்கல்வி, கல்லூரி கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி மற்றும் கல்லூரி கல்விக்காக கருத்து பரிமாற்றமும் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டவை, நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள கல்வி செயற்குழு கூட்டத்தில் பேசப்படும்.

கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தைக் கொண்டு வருவதன் சிக்கல்கள் குறித்து பல்வேறு வகைகளில் விவாதிக்கப்பட்டது. அதில் உள்ள சவால்களை எப்படி மாற்றி அமைப்பது? எப்படி மேம்படுத்துவது? உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்க முடிந்தது. அதுமட்டுமின்றி இன்றைய நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு புதிய தொழில் முனைவோர்களுக்கு பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

எதிர்காலத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வியின் தேவை உள்ளது என்பதை நம் முழு மனதோடு ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். தேசிய கல்விக்கொள்கை என்பது திறன் மேம்பாட்டு கல்வியில் இருந்து தொடங்குகிறது.

ஐஐடி போன்ற நிறுவனங்கள் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் இன்றி பாலிடெக்னிக் தொழிற்கல்வி மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிக்கத் தயாராக உள்ளது. பிரதான கல்வித்திட்டத்துடன் திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கையின் சிறப்புகளை எடுத்துரைத்தோம். ஜி20 கல்வி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. வருங்காலத்தில் கல்வித்துறையில் தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும். கடந்த 15 வருடங்களாக கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சுணக்கமாக உள்ளது.

கரோனாவிற்குப் பிறகு இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே, இடைநிற்றலை குறைப்பது தொடர்பாகவும், பள்ளிக்கல்வியை மேம்படுத்துவதற்கும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஜி20 நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள், பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நிறுவனங்கள் செயல்படுவதுதான் வருங்கால தேவையாக இருக்கும். அனைத்து பிராந்திய மொழிகளிலும் மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி வழங்கப்படும். சென்னையைத் தொடர்ந்து பூனே, அமிர்தசரஸ் போன்ற இடங்களில் கல்வி கருத்தரங்கம் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் பேசும்போது, "இந்தியாவைத் தாண்டி அனைத்து நாடுகளும் தங்களது கருத்துகளை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர். அதிலிருந்து எதிர்கால கல்வியில் தொழில் நுட்பம் மிகப்பெரிய பங்காற்ற உள்ளது என்பது தெளிவாகிறது. கரோனா பெருந்தொற்று காலத்தில் மாணவர்களை டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம்தான் நம்மால் இணைக்க முடிந்தது. அது நமக்கு சிறந்த பாடத்தையும் கற்றுக் கொடுத்தது.

தீக்க்ஷா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 50% பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் அது 100% ஆக வேண்டும். இதுதான் தேசிய கல்விக் கொள்கையின் நோக்கம்.

இந்த கருத்தரங்கம் மிகச் சிறப்பான வாய்ப்பு, மற்ற வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் குறித்து தெரிந்து கொள்ளவும்; அனைத்து நாடுகளின் கூட்டமைப்பு மூலம் ஒவ்வொரு நாடுகளும் பயனடையும்’ என்றும் தெரிவித்தார். 'சிறந்த ஆசிரியரை உருவாக்க, 2030ஆம் ஆண்டு பி.எட் நான்கு வருடம் படிப்பாக மாற்றப்படும். மேலும் கிராமங்கள்தோறும் இணைய வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேசிய கல்விக் கொள்கையை ஒன்றரை வருடத்தில் அமல்படுத்த உள்ளோம். 10, +2 என இருக்கும் தேர்வு முறையை 5+2+3+4 என மாற்ற உள்ளோம். இன்னும் 1.5 வருடம் முதல் 2 வருடத்தில் தேசிய கல்விக் கொள்கையின் குறிப்பிட்ட தேர்வு முறை அமல்படுத்தப்படும்.

திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டம் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்று மற்ற மாநிலத்திலும் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவில் 100 சதவீத குழந்தைகளும் பள்ளிக்கு செல்கின்றனர் - மத்திய பள்ளிக்கல்வித்துறை செயலாளர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.