ETV Bharat / state

மருத்துவப் படிப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித்தொகை - 25000 for each student in 20 medical students

நீட் தேர்வில் வெற்றிபெற்ற சென்னையைச் சேர்ந்த 20 மருத்துவ மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

மருத்துவ படிப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித்தொகை

author img

By

Published : Feb 4, 2022, 7:15 AM IST

சென்னை: சென்னை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சார்பில் நேற்று அண்ணா சாலை, தேவநேய பாவாணர் நூலகத்தில் அரசுப் பள்ளியில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவியருக்குத் தனியார் அறக்கட்டளையின் சார்பாக கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார், அரசுப் பள்ளிகளில் பயின்று, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள 20 மாணவ, மாணவியருக்கு தலா ரூ.25,000-க்கான காசோலைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், இல்லம் தேடிக் கல்வி சிறப்பு அலுவலர் மற்றும் பொது நூலக இயக்குநர் கே. இளம்பகவத், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா. மார்ஸ், ஆதவா அறக்கட்டளையின் தலைவர் பாலகுமரேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆண்டுதோறும் 25000 ரூபாய் உதவித்தொகை

மருத்துவப் படிப்பில் சேர்ந்த 20 மாணவர்களுக்கு உதவித்தொகை

இக்கல்வி உதவித் தொகையானது மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள சென்னை மாவட்டத்தைச் சார்ந்த 20 மாணவர்களுக்கு ஐந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கு ஆண்டுதோறும் தலா ரூ.25,000 தொடர்ந்து தங்களது அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் என ஆதவா அறக்கட்டளையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கல்லூரிகளின் வரைபடங்களை ஜியோ மேப் மூலம் அனுப்ப உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.