ETV Bharat / state

நீட் தேர்விற்கான கட்ஆப் மதிப்பெண்ணில் மாற்றமா? - மருத்துவபடிப்பு

மருத்துவ படிப்பிற்கான நீட் முடிவுகள் வெளியான நிலையில் கட் ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாகவும், ஆனால் பெரிய வேறுபாடு இருக்காது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

neet exam cut off  neet exam  Career Guidance  Jeyaprakash Gandhi  Career Guidance Jeyaprakash Gandhi  நீட் தேர்விற்கான கட்ஆப் மதிப்பெண்  கட்ஆப் மதிப்பெண்  நீட் தேர்வு  ஜெயபிரகாஷ் காந்தி  மருத்துவபடிப்பு  மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு
ஜெயபிரகாஷ் காந்தி
author img

By

Published : Sep 8, 2022, 4:45 PM IST

Updated : Sep 8, 2022, 5:01 PM IST

சென்னை: நீட் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்ணும் கடந்த ஆண்டினை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குறைந்துள்ளது. கடந்தாண்டு பொதுப் பிரிவினர்களுக்கான தகுதி மதிப்பெண் 138 ஆக இருந்தது. இந்த ஆண்டு 117 ஆக குறைந்துள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான தகுதி மதிப்பெண் 108 ஆக இருந்தது இந்த ஆண்டு 93 ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், “நீட் தேர்வு எழுதியவர்களில் கடந்தாண்டை விட நடப்பாண்டில் தகுதிப்பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடுமையான போட்டி ஏற்படும். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் தகுதிப்பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது.

நீட் தேர்வு மாணவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. 720 மதிப்பெண்ணிற்கு 93 மதிப்பெண்கள் பெற்றவர்கள் பணம் இருந்தால் எம்பிபிஎஸ் படிப்பில் சேர முடியும் என்பதை சுட்டிக்காட்டி உள்ளது. தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

நீட் மதிப்பெண் குறித்து பேசிய கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி விளக்கம்

இதர வகுப்பினருக்கு 582 to 590, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 535 to 545, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 505 to 515, ஆதிதிராவிடர் 426 to 435, ஆதிதிராவிடர் அருந்ததியர் 360 to 370, பழங்குடியினர் 315 to 325 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் தர வரிசை பட்டியல் வெளியான பின் முழுமையாக தெரியவரும் என்றாலும் கட் ஆப்பில் பெரிய வேறுபாடு இருக்காது என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 30 அரசு செவிலியர் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும் - அமைச்சர் கோரிக்கை

Last Updated : Sep 8, 2022, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.