இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வினை தமிழ்நாட்டில் 1.17 லட்சம் மாணவர்கள் உள்பட நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால், அக்டோபர் முதல் வாரத்திலோ அல்லது அக்டோபர் 13ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
தேர்வு முடிவுகள் வெளியானவுடன் தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. ஆன்லைன் வழியிலும், விண்ணப்ப முறையிலும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியான ஏற்பாடுகளை மருத்துவக் கல்வி இயக்குனரகம் செய்து வருகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களைப் பெற்று, அக்டோபர் மூன்றாவது வாரத்தில் முதல்கட்ட கலந்தாய்வு நடத்துவதற்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ், பல்மருத்துவ படிப்புகளில் சுமார் ஐந்தாயிரம் இடங்கள் உள்ளன. மேலும், இந்த ஆண்டு புதிதாக சில மருத்துவக் கல்லூரிகளுக்கும் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க...அரியர் தேர்வுகள் ரத்து: அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் எதிர்ப்பு!