ETV Bharat / state

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு: நாளை கடைசி நாள்! - நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு

சென்னை: நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை நாளை (ஜுன்.23) வரை தெரிவிக்கலாம் என உயர்நிலை குழு தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து கருத்து கேட்பு

author img

By

Published : Jun 22, 2021, 5:01 PM IST

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து, பரிந்துரை அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், 9 பேர் கொண்ட குழுவை அரசு அமைத்தது.

இந்தக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் கடந்த 14-ஆம் தேதி நடைபெற்றது. அப்போது நீட் தேர்வு பாதிப்பு குறித்து neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என அக்குழுவின் தலைவர் நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்தார்.

இதுவரை நீதிபதி ஏ.கே.ராஜனுக்கு, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மின்னஞ்சல் வந்துள்ளது. அவற்றில் நீட் தேர்வு வேண்டாம் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நாளை (ஜுன்.23) வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என நீதிபதி ஏ.கே.ராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் - தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.