ETV Bharat / state

தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை: சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு

author img

By

Published : Mar 21, 2019, 10:38 PM IST

சென்னை:  தமிழகத்தில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை

சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து தனியார் பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பின் பொருளாளர் கனகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தமிழகத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. தொழில்நுட்பத்திற்காக ஐஐடி மத்திய அரசால் தனியாக இயக்கப்படுகிறது.

தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகம் மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகியவற்றிற்கான படிப்புகளை அளித்து வந்தது.

தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்க கோரிக்கை

வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்விக்கு அண்ணா பல்கலைக் கழகம் தனியாக உருவாக்கப்பட்டது. ஆனால் அண்ணா பல்கலைகழகத்திற்கு அதனை மேம்படுத்த போதுமான நேரம் இல்லாததால் தனியார் பொறியியல் கல்லூரிக்கு தனியாக ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

Intro:தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
தனியாக உருவாக்க வேண்டும்
சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு கோரிக்கை

Body:சென்னை, தமிழகத்தில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தனியாக உருவாக்க வேண்டும் என தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட பின்னர் தமிழக உயர் கல்வித் துறைக்கும் பல்கலைக்கழகத்திற்கும் இடையே சுமுகமான போக்கு நிலவவில்லை.
தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தமிழக உயர்கல்வித்துறை நியமிக்க அரசாணை வெளியிட்டது.
இதனை ஏற்க மறுத்து தன்னை கலந்தாலோசிக்காமல் அரசனை வெளியிட்டதை கண்டித்து பொறியியல் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பொறுப்பில் இருந்து சூரப்பா ராஜினாமா செய்துள்ளார். மேலும் இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகம் நடத்துவது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
அரசுக்கும் துணைவேந்தர் சிறப்பாக இருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரியில் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் முக்கியமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து பிரித்து தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாகிக்க தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கூட்டமைப்புக்கு பொருளாளர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம், மீன்வள பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்கள் உள்ளன.
தொழில்நுட்பத்திற்காக ஐஐடி மத்திய அரசால் தனியாக இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆரம்பத்தில் சென்னை பல்கலைக்கழகம் மருத்துவம், வேளாண்மை, சட்டம் ஆகியவற்றிற்கான படிப்புகளை அளித்து வந்தது.
வளர்ந்து வரும் காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்பக் கல்விக்கு அண்ணா பல்கலை கழகம் தனியாக உருவாக்கப்பட்டது. எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் சுயநிதிக் கல்லூரிகள் அதிக முக்கியத்துவம் அளித்தார். அதனால் சுயநிதிக் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே தொழில்நுட்பக் கல்லூரியை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைத்தனர். ஆனால் அண்ணா பல்கலைகழகம் அதனை மேம்படுத்துவதற்கு போதுமான நேரம் இல்லாமல் உள்ளது. இதனால் தனியார் பொறியியல் கல்லூரிகளை மேம்படுத்த போதுமான நேரத்தை ஒதுக்க முடியாததால், தனியார்கள் நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரிக்கு தனியாக ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் அவர்களின் தரத்திற்கு ஏற்ப தங்கள் நடத்தக்கூடிய பொறியியல் கல்லூரியில் தரத்தினை எதிர்பார்ப்பதால் எங்களுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக தேர்தலை நடத்துவது கேள்வித்தாள் தயாரித்தல் விடைத்தாள் திருத்துவதில் போன்றவற்றிலுள்ள சிக்கல்களால் தனியார் பொறியியல் கல்லூரிகள் பாதிக்கப்படுகிறோம். பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவில் மாணவர்கள் சேராத நேரத்தில் அவர்கள் தேர்ச்சி பெறுவது என்பது கடினமாக இருக்கிறது. எனவே தனியாக ஒரு பல்கலைக்கழகத்தை ஒதுக்கி வைத்தால் மிகவும் நன்மையாக இருக்கும் என தெரிவித்தார்.

முடியவில்லை.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.