தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் 14ஆம் தேதிவரை 127 இடங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.
இச்சோதனையில், கணக்கில் வராத பணம் ரூ. 6 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயும், வங்கி இருப்பாக 37 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதோடு 7.232 கிலோ தங்கம், 9.843 கிலோ வெள்ளி, 10.52 கேரட் வைரமும் கண்டுபிடிக்கப்பட்டது. அதிகபட்சமாக வேலூரில் 3.25 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.