ETV Bharat / state

தேசிய லோக் அதாலத் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீர்வு... - நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகள்

சென்னை: தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தேசிய சட்டப் பணி ஆணை குழு உத்தரவின் பேரில் லோக் அதாலத்  மூலம் பல கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன.

hc
author img

By

Published : Sep 14, 2019, 10:02 PM IST

நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய லோக் அதாலத், தமிழ்நாட்டில் இன்று நடத்தப்பட்டது.

இதில், சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், மதுரைக் கிளையில் 6 அமர்வுகள், வங்கி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகளை விசாரிக்க 8 தனி அமர்வுகள், மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் 489 அமர்வுகள் என மொத்தம் 513 அமர்வுகளில், 2 லட்சத்து 21 ஆயிரம் வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டது.

இதில், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 249 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரத்து 84 ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 394 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:தமிழகம் முழுவதும் இன்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 249 கோடியே 59 லட்சம் ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 394 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளன.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு உத்தரவின்படி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் தேசிய லோக் அதாலத், தமிழகத்தில் இன்று நடத்தப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் 10 அமர்வுகள், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகள், வங்கி சம்பந்தப்பட்ட நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகளை விசாரிக்க 8 தனி அமர்வுகள், மாவட்ட மற்றும் தாலுகா அளவில் 489 அமர்வுகள் என மொத்தம், 513 அமர்வுகளில், 2 லட்சத்து 21 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில், நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள வழக்குகள், நீதிமன்ற விசாரணைக்கு வராத வழக்குகள் என, மொத்தம், 249 கோடியே 59 லட்சத்து 7 ஆயிரத்து 84 ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 394 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு தெரிவித்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.