ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கை: மூத்த பத்திரிகையாளர் குமரேசன் கருத்து

சென்னை: தேசிய கல்விக் கொள்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் குமரேசன் அவரது முகநூல் பக்கத்தில்  சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அதுகுறித்த ஒரு பார்வை

மூத்த பத்திரிக்கையாளர் குமரேசன்
author img

By

Published : Jul 23, 2019, 8:12 PM IST

Updated : Jul 24, 2019, 6:55 PM IST

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை இவ்வளவு சர்ச்சைக்கு உள்ளாகியிருப்பதும் விவாதத்தை ஏற்படுத்தியிருப்பதும் ஏன்? இன்றுவரை தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கை குறித்து மட்டுமே மத்திய அரசிடம் தனது எதிர்க்கருத்தை தெரிவித்துவருகிறது.

புதிய வரைவு அறிக்கையில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள், ஆசிரியர்களுக்கு புதிய கல்விக்கொள்கையின் பாடத்திட்டங்கள் குறித்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் அமைக்க ஏதுவான சூழல், திறனறித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள், தனியார் அமைப்புகளின் தலையீடு, சாதிய தலையீடு என விவாதத்திற்கு உட்படுத்தவேண்டிய கூறுகள் ஏராளமாக உள்ளன.

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகளில் பராமரிப்பு, கற்பித்தல் குறைபாடு என்ற காரணங்களால் ஆண்டிற்கு ஆண்டு மாணவர்களின் சேர்க்கை ஒருபுறம் குறைந்துவருகிறது. மற்றொருபுறம் மாநில அரசே பள்ளிகளை மேம்படுத்தும் முயற்சியை கைவிட்டு பள்ளிகளை மூட ஆலோசித்துவருகிறது. இந்த சூழலில் புதிய கல்விக் கொள்கை தமிழ்நாட்டில் சாத்தியமா என்பதே கேள்விக்குறிதான்.

முன்னதாக மத்திய அரசு அறிவித்த நீட் தேர்விற்கான அதிர்வலைகளுக்கே இன்னும் மாநில அரசு முற்றுப்புள்ளி வைக்காதநிலையில், அந்த வரிசையில் தற்போது புதிய கல்விக் கொள்கையும் இணைந்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, அரசியல் வட்டாரங்களில் பெரிதளவில் மும்மொழிக் கொள்கை, மாணவர்களின் வயது வரம்பு, குருகுலக் கல்வி போன்றவையே பேசப்பட்டன. சில கல்வியாளர்களின் கருத்துகளுக்குப் பின்னும், நடிகர் சூர்யாவின் கருத்துக்கு பின்னர்தான் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் விவாதங்கள் அதிகரித்தன. இவர்களது கருத்துகளுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தேசிய கல்விக் கொள்கை குறித்து மூத்த பத்திரிகையாளர் குமரேசன், 'ஆங்கிலத்தின் வழியாக படிப்பதுதான் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்ற நினைத்திருந்தோம். ஆனால் உலகில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லை. அந்தந்த நாட்டின் மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆகவேதான் அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.

இது யாரோ தாய்மொழிக் கல்வி செயற்பாட்டாளர் ஏதோ ஆய்வரங்கில் சொன்னதல்ல. மத்திய அரசு இரண்டே மொழிகளில் மட்டும் முழுமையாக வெளியிட்டு இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் கருத்துக் கூற வேண்டும் என்று கெடுபிடி செய்திருக்கிற புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வாசகங்கள்.

கஸ்தூரி ரங்கன் சார், மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். உலக அளவில் நீங்கள் சொல்வதைத்தானே நாங்கள் இந்திய அளவில் சொல்கிறோம். அந்தந்த மாநில மொழிகளில் பயில்வதே ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வழி. பிறகு ஏன் சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பது என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தைப் பரிந்துரைத்திருக்கிறீர்கள்?' என பதிவிட்டிருக்கிறார்.

இவரது கருத்துகளை கூர்ந்து கவனித்தால் சில உண்மைகள் நமக்குப் புரியும். அதாவது, 1976ஆம் ஆண்டுவரை பள்ளிக் கல்வி மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அக்காலகட்டத்தில், தமிழ்நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த கல்வியை அனைவருக்கும் அளித்ததாக பலராலும் பேசப்பட்டது. மாநில மொழிகளில் (தாய் மொழியில்) பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான புரிதல்கள் சரியான முறையில் இருந்துவந்தன.

கடந்த சில ஆண்டுகளாகவே கல்வித் துறை மட்டுமின்றி, மாநில அரசின் பல்வேறு உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டுவருகிறது. சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே நாட்டின் கல்வி நிலையை மேம்படுத்த மத்திய அரசு நிர்ணயிக்கும் அனைத்து குழுக்களுமே மும்மொழிக் கொள்கையை ஆதரித்தே வெளியாகின்றன. ஆனாலும், தற்போதைய பாஜகவால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையே மக்கள் மத்தியில் அதிகளவில் விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

அக்குழு முன்வைத்த மூன்று வயது முதல் ஆரம்பக் கல்வி, குருகுலக் கல்வி, ஜாதி, மத அடிப்படையிலான கல்வி, மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளில் தேசிய திறனறித் தேர்வுகள் நடத்துதல், கல்லூரி, பல்கலைக்கழக படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு, பிரதமரின் தலைமையில் தேசிய அளவிலான 'ராஷ்ட்ரிய சிக்ஷா ஆயோக்' கல்வி அமைப்பு போன்றவைகளும் அதற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.

அதுமட்டுமின்றி அக்குழு கல்வித்தரத்தை மேம்படுத்த சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளன. ஆனால், அதற்கான அடிப்படைத் தரவுகள் ஏதும் இதில் குறிப்பிடப்படாததால் அவற்றின் மீது நம்பிக்கையின்மையே ஏற்படுகின்றன. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை குறிப்பிட்ட மொழிகளுக்குள்ளே அடைக்க முற்படுவது எந்தவகையிலும் உகந்ததல்ல. அது மாநில வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் இடையூறாகவே அமையும்.

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் கல்விக் கொள்கைகளில் விவாதங்களை ஏற்படுத்தும் இவ்வளவு நடைமுறை சிக்கல்கள் இருப்பது அந்நாட்டினை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லுமா என்பது கேள்விக்குறியே.

Intro:Body:

“ஆங்கிலத்தின் வழியாகப் படிப்பதுதான் கல்வி வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் ஏற்றது என்ற நினைத்திருந்தோம். ஆனால் உலகில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக இல்லை. அந்தந்த நாட்டின் மொழியில்தான் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. ஆகவேதான் அந்த நாடுகள் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் சிறந்த முன்னேற்றங்களைக் கண்டுள்ளன.”

.இது யாரோ தாய்மொழிக் கல்வி ஆர்வலர் ஏதோ ஆய்வரங்கில் சொன்னதல்ல. மத்திய அரசு இரண்டே மொழிகளில் மட்டும் முழுமையாக வெளியிட்டு இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் கருத்துக் கூற வேண்டும் என்று கெடுபிடி செய்திருக்கிற புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள வாசகங்கள் இவை.

கஸ்தூரி ரங்கன் சார், மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறீர்கள். உலக அளவில் நீங்கள் சொல்வதைத்தானே நாங்கள் இந்திய அளவில் சொல்கிறோம். அந்தந்த மாநில மொழிகளில் பயில்வதே ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் வழி. பிறகு ஏன் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிப்பது என்ற ஆட்சியாளர்களின் விருப்பத்தைப் பரிந்துரைத்திருக்கிறீர்கள்?

-குமரேசன்

Conclusion:
Last Updated : Jul 24, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.