ETV Bharat / state

மீண்டும் புத்துயிர் பெறுகிறதா விடுதலைப்புலிகள் இயக்கம்? - தேசிய புலனாய்வு முகமை

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும், அங்கிருந்து ஹெராயின் வருவதுமான நிகழ்வுகள் சமீபகாலமாக அதிகரித்து உள்ள நிலையில், பாகிஸ்தான் போதைமருந்து மாபியாவின் உதவியிடன், விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

இலங்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து கடத்தப்படும் கஞ்சா - பாகிஸ்தான் மாபியா உதவியுடன் மீண்டும் புத்துயிர் பெறுகிறதா விடுதலைப்புலிகள் இயக்கம்?

author img

By

Published : Aug 6, 2023, 12:18 PM IST

சென்னை: நாகப்பட்டினத்தில் இருந்து, கடல் வழியாக, இலங்கைக்கு கடத்த இருந்த, 300 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இதுதொடர்பாக, 6 பேரை, நாகை போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு கடலோர பாதுகாப்புப் படையினர், நாகப்பட்டினம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள பல்வேறு குடோன்கள் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு உள்ளனர்.

கஞ்சா கடத்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலம் மற்றும் ஒடிசா மாநில எல்லை உள்ளிட்டப் பகுதிகளில் அதனைப் பெற்று இலங்கைக்கு கடத்தி வருவதாக, தமிழ்நாடு உளவுத்துறை வெளியிட்டு உள்ள தகவலை மேற்கோள் காட்டி, IANS செய்தி வெளியிட்டு உள்ளது. இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படும் நிகழ்வுகளின் பின்னணியில், தமிழ் தேசியவாத அமைப்புகள் இருப்பதாக, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் நடவடிக்கைகளுக்காக, அந்த இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல், ஹவாலா மோசடி உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவதாக, தேசிய புலனாய்வு முகமை (NIA) பலர் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா, அங்கிருந்து ஹெராயின் போதைப் பொருளாக, இங்கு திரும்ப வருவதாக, தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம், கிடைக்கும் வருவாயைக் கொண்டு, விடுதலைப்புலிகள் இயக்கம் புத்துயிர் பெற்று வருவதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருட்கள், 5 ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் பறிமுதல் செய்த நிகழ்வு தொடர்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி சத்னுகம் என்ற சபேசன் கைது செய்யப்பட்டு, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.

இந்த நிலையில், சபேசனின் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் அல்லா பிச்சையை, போதைப்பொருள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு பிரிவினர் சமீபத்தில் கைது செய்து உள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் முக்கிய போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் என்று சந்தேகிக்கப்படும் அல்லா பிச்சையிடம், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், 3 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டில் இருந்து செயல்படும் ஹாஜி அலி நெட்வொர்க், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளின் சந்தைகளில், போதைப் பொருட்கள் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருட்கள், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகியான சபேசனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நிகழ்வின் பின்னணியில், ஹாஜி அலி நெட்வொர்க் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

IANS செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த ஓய்வு பெற்ற காவல்துறை மூத்த உயர் அதிகாரி கூறியதாவது, “தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாம்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் பலர் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களில் சிலர் மட்டுமே, காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நபர்களின் மறைமுக ஆதரவில், தமிழ்நாட்டில் இருந்து, இலங்கைக்கு கடத்தப்படும் கஞ்சா, ஹெராயின் ஆக, மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்படுகிறது. இதன்மூலம் கிடைக்கும் பணம், விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்து உள்ளார்.

போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் தொடர்பாக, 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தேசிய புலனாய்வு முகமை நடத்திய அதிரடி சோதனையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை, புத்துயிர் செய்யும் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி இருந்த குணசேகரன் என்ற குணா உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஹாஜி சலீம் என்ற பாகிஸ்தானி, பாகிஸ்தானில் இருந்து இலங்கை நாட்டில் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை வழங்குவதில் முக்கிய பங்காற்றி வருவதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இலங்கை நாட்டை சேர்ந்த மேரி பிரான்சிஸ்கா, விமானம் மூலம் மும்பை வந்து, அங்கு உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், நீண்ட நாட்களாக முடங்கி இருந்த வங்கிக் கணக்கை மீண்டும் ஆக்டிவேட் செய்து உள்ளார். அதேபோல், கென்னிஸ்டன் பெர்ணாண்டோ, கே. பாஸ்கரன் உள்ளிட்டோர், இந்தியாவில் போலி ஆவணங்களை பயன்படுத்தி, வங்கிக் கணக்குகளை துவக்கி, இந்தியா மற்றும் இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.