ETV Bharat / state

பரோல் வழக்கில், நாளை நீதிமன்றத்தில் வாதிடவுள்ள நளினி! - Nalini parol case

சென்னை: ஆயுள் தண்டனை கைதியான நளினி மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க 6 மாதம் பரோல் வழங்கக் கோரி தாக்கல் செய்த வழக்கில், நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க கோரிய நிலையில், இந்த வழக்கு நாளை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

Nalini parol
author img

By

Published : Apr 14, 2019, 1:34 PM IST

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசித்துவரும் தனது மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளை கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமனறத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், தனது தூக்கு தண்டணையை ஆயுள் தண்டனையாக தமிழ்நாடு அரசு 2000ஆம் ஆண்டு குறைத்த நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த 3,700 ஆயுள் தண்டனை கைதிகளை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.

ஆயுள் தண்டனை கைதிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மாதம் பரோல் வழங்க சிறை விதிகள் உள்ள போதிலும், 27 ஆண்டுகளாக தனக்கு சிறை நிர்வாகத்தால் பரோல் மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், பரோல் மனுமீதான வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைக்கும் விதமாக, தானே நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு முன்பு நாளைக்கு விசாரணைக்கு வரவிருக்கிறது. இந்த வழக்கில் நளினி நேரில் ஆஜராகி தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உள்ளார்.

இந்நிலையில், பரோல் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நளினி, பின் அதை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.