ETV Bharat / state

பரோலை நீட்டிக்க அரசு பரிந்துரைக்க வேண்டும்: நளினி வழக்கறிஞர் கோரிக்கை - நளினி பரோல் செய்திகள்

சென்னை: மகளின் திருமண நிகழ்விற்காக சிறையிலிருந்து வெளிவந்த நளினியின் பரோல் இம்மாதம் 25ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், பரோலின் கால அளவை ஒரு மாதம் நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என நளினியின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நளினி வழக்கறிஞர்
author img

By

Published : Aug 17, 2019, 5:29 PM IST

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இதுவரை இந்தியாவில் நன்னடத்தையை கருத்தில் கொண்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்கள். யாரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை கேட்டு முடிவெடுத்ததில்லை. பஸ் எரிப்பு வழக்கில்கூட பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கேட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படவில்லை. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் ஏழு பேரை விட மிகப்பெரிய தவறு செய்த பலர் குறைந்தபட்ச தண்டனை பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அரசியல் பாகுபாடின்றி இவர்கள் எழுவரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நளினி வழக்கறிஞர்

மேலும், தமிழ்நாடு அரசு எழுவர் வழக்கில் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய முன்னதாகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி அவர்களது விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என அரசு வலியுறுத்த வேண்டும். எனவே, அவருக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவும், விரைவில் நளினி உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 17.08.19

பரோலில் இருக்கும் நளினியின் பரோல் 25 ம் தேதியுடன் முடிவதால், மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்க தமிழக அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என நளினியின் வழக்கறிஞர் பேட்டி..

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில்,
இந்தியாவில் அதிக ஆண்டுகள் சிறையில் இருக்கும் பெண் நளினி சுமார் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். ஏற்கனவே தமிழக அரசு நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானத்தின் படி கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இதுவரை முன் விடுதலை செய்யப்பட்டவர்கள் பலர் உள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தை கேட்டுத்தான் முடிவெடுப்போம் என்பதெல்லாம் நடைமுறை இல்லை.. பஸ் எரிப்பு வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை கேட்டு குற்றவாளிகள் விடுதலை செய்யப்படவில்லை.. நன்னடத்தையை கருத்தில் கொண்டு 7 பேரையும் விடுவிக்க முடியும் இந்த 7 பேரை விட குறைந்த தண்டனை பெற்ற 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை கருத்தில் கொள்ள வேண்டும். அரசியல்.பாகுபாடின்றி அவர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.. விடுதலை புலிகள் அமைப்பு தடைக்கு செல்லப்படும் காரணம், அதன் ஆதரவாளர்கள் அகண்ட தமிழ் தேசியத்தை உருவாக்க நினைக்கிறார்கள் என்பது உள்ளிட்ட காரணங்கள் கூறப்பட்டது... ஆனால் இந்திய அரசு கற்பனை கதையை கூறி தடையை நீட்டித்து வருகிறது.. எனவே நளினி உள்ளிட்டோரை விடுவிப்பது குறித்தும், நளினியின் மகள் திருமணத்திற்காக மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்..

tn_che_02_Nalini_lawyer_parole_byte_script_7204894
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.