ETV Bharat / state

'நாளைய தீர்ப்பு நாளிதழ்' ஆசிரியர் கைது

சென்னை: அமைச்சர் சண்முகத்தின் மகன்  குறித்து வாட்ஸ்ஆப் மற்றும் சமூக வலைதளங்களில் தவறான தகவலுடன் வீடியோ பதிவிட்ட நாளைய தீர்ப்பு  இதழின் ஆசிரியர் செல்லப்பாண்டி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Arrest
author img

By

Published : Jul 24, 2019, 11:49 PM IST

சென்னையில் ஜூன் மாதம் 26ஆம் தேதி குடிபோதையில் இளைஞர் ஒருவர் பணியில் இருந்த காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளால் திட்டி, சண்டையிட்டார். அந்த காட்சி சமூக வலைதளங்களில் அதிவேகமாக பரவியது. இதனையடுத்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். ஆனால் அவர் தமிழ்நாடு சட்டப்பேரவை நீதிமன்றங்கள் மற்றும் சிறைக்காவல்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் மகன் என தவறாக வீடியோ பரவியது.

இதனையடுத்து, அமைச்சர் சி.வி.சண்முகம் இந்த தவறான வீடியோவால் தனக்கும், தனது குடும்பத்திற்கும் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற வீடியோ பரப்புவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். இதன் அடிப்படையில் காவல் ஆணையர் உத்தரவின்படி குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவி விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் மேற்கொண்ட விசாரணையில் 'நாளைய தீர்ப்பு' என்ற மாதம் இருமுறை வெளியாகும் இதழின் ஆசிரியர், அமைச்சரின் மகன் குடிபோதையில் காவல்துறையினருடன் ரகளை என்ற தலைப்பில் வீடியோ பதிவிட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து நாளைய தீர்ப்பு நாளிதழின் ஆசிரியர் செல்லபாண்டி 36 மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை நீதமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

செல்லபாண்டி 'நாளைய தீர்ப்பு' நாளிதழை கடந்த 10 வருடங்களாக நடத்தி வருவதாகவும், naalaiya theerppu.com என்ற இணையதளத்தை மூன்று வருடங்களாக நடத்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

அமைச்சர் சண்முகத்தின் மகன்  குறித்து வாட்சப் மற்றும் சமூக வலைதளங்களில் பொய்யான தகவலுடன் வீடியோ பதிவிட்ட நாளைய தீர்ப்பு  இதழின் ஆசிரியர் செல்லப்பாண்டி கைது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.