சென்னை மெரினா நடுக்குப்பம் நடேசன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராம் (எ) ராம்குமார் (24). பிரபல ரவுடியான இவர் மீது ஏற்கெனவே மயிலாப்பூர் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் நேற்றிரவு 11 மணியளவில் ராம்குமார், நடேசன் சாலையிலுள்ள ஒரு கடையின் முன்பு தனது நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஆட்டோவில் வந்த பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் ராம்குமாரைக் கத்தி, உருட்டுக்கட்டை, பைப் போன்றவற்றால் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து ராம்குமாரை ஆட்டோவில் கடத்திக்கொண்டு நடுகுப்பம் பகுதியிலுள்ள பொதுக்கழிப்பறையினுள் வைத்து தாக்கியுள்ளனர். அத்தோடு விட்டுவிடாமல் அதன்பின்னரும் ராம்குமாரை அந்நபர்கள் ஆட்டோவில் தூக்கிச் சென்றுள்ளனர். இதைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்களில் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்துள்ளார்.
அந்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மயிலாப்பூர் காவல் துறையினர், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நடுக்குப்பத்தைச் சேர்ந்த குமார் தன் கூட்டாளிகளுடன் வந்து ராம்குமாரை கடத்திச் செல்லும் காட்சி பதிவாகியிருப்பது தெரியவந்தது.
மேலும், ராம்குமாருக்கும் நடுக்குப்பத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்கும் சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறானது கடந்த சில நாள்களுக்கு முன் கோஷ்டி மோதலாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. இரு நாள்களுக்கு முன்பாக ராம்குமார், குமார் தரப்பு நபர் ஒருவரை தனியாக வைத்து தாக்கியதாகவும் அதற்கு பழிவாங்குவதற்காகவே குமார் தன் நண்பர்களுடன் சேர்ந்து தற்போது ராம்குமாரைத் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் ஆண் சடலம் மீட்பு!