ETV Bharat / state

நான் முதல்வன் திட்டம்: 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

நான் முதல்வன் திட்டத்தின்படி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க தற்போது 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

நான் முதல்வன் திட்டம்: 6 நிறுவனங்களுடன் கையெழுத்தானது- பொன்முடி

author img

By

Published : Nov 18, 2022, 3:17 PM IST

சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முன்னிலையில் 'நான் முதல்வன்' திட்ட அறிவிப்பின்கீழ் பொறியியல், பாலிடெக்னிக் மாணவர்கள் படிக்கும்போதே பயிற்சி பெற 6 தொழிற்சாலை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், டோட் இயக்குநர் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த ஒப்பந்தத்தில் மேண்டோ (ஸ்ரீ பெரும்புதூர் நிறுவனம்), வீவீடி என் (பொள்ளாச்சி), கண்ணபிரான் மில்ஸ் (கோவை, மதுரை, பெருந்துறை), கேஜி குழுமம் (கோவை), லட்சுமி மிசின் ஒர்க்ஸ் (கோவை), கேப்ரியல் (விழுப்புரம், ஓசூர்) ஆகிய 6 நிறுவனங்கள் மூலமாக சுமார் 1560 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி, 'முதலமைச்சர் துவங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமே படிக்கும் போதே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவதுதான். அதன் முன்னெடுப்பாக தற்போது 6 தனியார் தொழிற்சாலை நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னை பல்கலைக்கழகத் தேர்வில் கடந்த ஆண்டு வினாத்தாளை இன்றைய தேர்வுக்கு வழங்கியதால் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கான தேர்வு, உரிய முறையில் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

தற்போது அரசு கல்லூரியில் உதவி கௌரவ விரிவுரையாளராகப்பணியாற்றி வந்தாலும் கட்டாயமாக உதவி பேராசிரியருக்கான தேர்வு எழுதித்தான் பணி அமர்த்தப்படுவார்கள் என அமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.

பச்சையப்பன் கல்லூரி உதவிப்பேராசிரியர்கள் விவகாரத்தில், அவர்கள் தனியாக அறக்கட்டளை நடத்தி அதன்கீழ் பேராசிரியர்களை நியமனம் செய்து வருவதால், உதவிப்பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக குழு அமைத்து, நியமனம் முறையாக நடைபெறுகிறதா என கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஏழு அரசு மருத்துவமனைகள்: விரைவாக கட்டுமானப் பணிகள் தொடங்க அமைச்சர் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.