ETV Bharat / state

'நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்' - சீமான்!

சென்னை: மது கடைகளைத் திறக்கும் தமிழ்நாடு அரசின் முடிவைக் கைவிடக்கோரி, அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

author img

By

Published : May 8, 2020, 12:32 AM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

'கொடிய கரோனோ பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் நோய்த்தாக்கம் அதிகரித்துவரும் இவ்வேளையில், தமிழ்நாடு அரசு மது கடைகளைத் திறப்பதால், இந்த நோய்த்தொற்று மேலும் அதிகரிக்கக் கூடும். எனவே, மது கடைகளைத் திறக்கக்கூடாது என்று நாடு முழுக்க சமூக ஆர்வலர்களும், அனைத்து அரசியல் அமைப்புகளும் குரலெழுப்பி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சியும் மது கடைகளைத் திறக்கக்கூடாது என்று அரசுக்கு நேற்று கோரிக்கை வைத்தது.

இந்நிலையில் மது கடைகளைத் திறக்கும் தமிழ்நாடு அரசின் முடிவைக் கைவிடக்கோரி ஈரோடு மாநகராட்சி எஸ்.எஸ்.பி நகரில் உள்ள நாம் தமிழர் கட்சியின், ஈரோடு மேற்கு தொகுதி பொறுப்பாளர் தம்பி தமிழ்ச்செல்வன் தனது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பு விதிகளை முறையாகக் கடைபிடித்து, அமைதியாக, வீட்டுக்கு வெளியில் பதாகை ஏந்தி அறவழியில் எளிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார். அவர்களை ஈரோடு மாநகரக் காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தி வருவதாகவும், கொடும் சட்டப்பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க இருப்பதாகவும் வரும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

ஜனநாயக நாட்டில் மக்கள் நலனுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறவழியில் போராட்டம் நடத்துவதும், எதிர்ப்பினை பதிவு செய்வதும் போன்ற செயல்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளாகும்.

ஆளும் அதிமுகவைத் தவிரத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே கருத்தோட்டத்தில் மது கடைகளைத் திறப்பதற்குக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களில் பெரும்பான்மையானோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக மது கடைகளை மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த போராடி வருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், வருமானத்தை மட்டுமே குறிவைத்து தமிழ்நாடு அரசு மது கடைகளைத் திறப்பது சரியான செயல் அல்ல என்று எதிர்ப்புத் தெரிவிக்கும்விதமாக அமைதி வழியில், போராடிய நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர் ஈரோடு தமிழ்ச்செல்வனைக் கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பத்தினர்
ஆர்ப்பாட்டம் நடத்திய குடும்பத்தினர்

கருத்துரிமைக்கு எதிரான இந்தக் கொடுமை நடவடிக்கையினைத் தமிழ்நாடு காவல் துறை உடனடியாக கைவிட வேண்டும் எனவும்; ஈரோடு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தனது எதேச்சதிகார நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, கைது செய்யப்பட்டுள்ள தமிழ்ச்செல்வனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் இதன் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

இல்லாவிடில் இன்று ஈரோட்டில் மட்டும் நடைபெற்ற போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழ்நாடு முழுக்கப் பரவும் எனவும்; அது தேவையில்லாத சட்டம் ஒழுங்கு சிக்கலை உருவாக்கும் எனவும் தமிழ்நாடு அரசிற்கும், தமிழ்நாடு காவல் துறைக்கும் சுட்டிக்காட்டி எச்சரிக்கிறேன்' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘நம்பிக்கையோடு இருங்கள்; கரோனாவுக்கு எதிரான போரில் வென்றுவருவோம்’ - சீமான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.