ETV Bharat / state

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நாக் அங்கீகாரம் தருவதற்கு நாளை ஆய்வு!

author img

By

Published : Aug 10, 2023, 9:40 PM IST

அண்ணா பல்கலைக் கழகத்திற்கான தேசிய தர அங்கீகாரம் 2019ஆம் ஆண்டு காலாவதியான நிலையில் அங்கீகாரம் வழங்குவதற்கான குழு நாளை நேரில் ஆய்வு செய்ய உள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்திற்கு நாக் அங்கீகாரம் தருவதற்கு நாளை ஆய்வு

சென்னை: தேசிய தர அங்கீகாரம் வழங்குவதற்கான குழு நாளை அண்ணா பல்கலைக் கழகத்தில் நேரில் ஆய்வு செய்ய உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேசிய தர அங்கீகாரம் (நாக்) கடந்த 2019 செப்டம்பர் மாதம் காலாவதியானது.

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையானது (National Assessment and Accreditation Council, NAAC) இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப்படுத்தும் ஓர் அமைப்பு ஆகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு நிதியில் தன்னாட்சியுடன் இந்த அமைப்பு இயங்கி வருகிறது.

இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களின் மதிப்பீடுகளை நடத்தும் ஒரு அரசு அமைப்பாக இருந்தாலும், அதன் தரவரிசையானது பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிராந்தியத்திற்கு குறிப்பிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் உட்கட்டமைப்பு, ஆசிரியர்கள், ஆராய்ச்சி, மாணவர்களுக்கான வசதிகள், ஆய்வகம் போன்றவற்றின் அடிப்படையில் ஆய்வுசெய்யப்பட்டு, தேசிய மதிப்பீட்டு மற்றும் அங்கீகார கவுன்சில் (நாக்) சான்றிதழ் வழங்கி வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் 1978ஆம் ஆண்டு ஒரு ஒற்றைப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்டது. இப்பல்கலைக் கழகத்திற்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த டாக்டர் சி.என்.அண்ணதுரையின் பெயர் சூட்டப்பட்டது.

இது சமூகத்தின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட தேவைகளுக்குப் பொருத்தமான பொறியியல், தொழில்நுட்பம், கட்டடக்கலை மற்றும் பயன்பாட்டு அறிவியல் ஆகியவற்றில் உயர் கல்வியை வழங்குகிறது. ஆராய்ச்சியை ஊக்குவிப்பது மற்றும் அதிலிருந்து பெறப்பட்ட அறிவைப் பரப்புவது தவிர, கல்வி மற்றும் தொழில்துறை சமூகங்களுக்கு இடையே ஒத்துழைப்பை வளர்க்கிறது.

இதையும் படிங்க: திண்டுக்கல் காவலப்பட்டி ஊராட்சி நிதி முறைகேடு; ஊரக வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு

இந்த நிலையில், அண்ணப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கப்பட்ட நாக் அங்கீகாரம் 2019ம் ஆண்டே முடிவடைந்தது. ஆனால், இதுவரை அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை. இதனால் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் மதிப்பீட்டுக் குழுவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல் கட்டமாக கடந்த வாரம் ஆய்வை நடத்தினர்.

இந்த நிலையில் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகள் நாளை நேரில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அங்கீகாரம் வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. 2002, 2007, 2014ஆம் ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் அங்கீகாரத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரத்தை உறுதி செய்யும் அண்ணா பல்கலைக்கழகம் (NAAC) தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறாமல் இருந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னையில் சிறுமியை முட்டிய மாடு இதோ... மாட்டுத்தொழுவங்களை திடீர் ஆய்வுசெய்த சென்னை ஆணையர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.