ETV Bharat / state

முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு - thagaisal tamilar award n sankaraiya

'தகைசால் தமிழர்’ விருதிற்கு முதுபெரும் தலைவர் என். சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Thagaisal Tamizhar n-sankaraiah
என். சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது அறிவிப்பு
author img

By

Published : Jul 28, 2021, 12:23 PM IST

சென்னை: இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவர் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, அண்மையில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவை பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டிற்கான “தகைசால் தமிழர்" விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

'தகைசால் தமிழர்' விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வரும் ஆகஸ்ட் திங்கள் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ’தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கை இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று’ - இயக்குநர் பாரதிராஜா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.