சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பாா்சல்களை சுங்கத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது சென்னையிலிருந்து, மலேசியா செல்லும் சரக்கு விமானத்தில் ஏற்றம் செய்ய இருந்த பாா்சல்களை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர்.
அதில் உயிருடன் இருக்கும் நட்சத்திர ஆமைகள் ஏராளமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுமாா் ரூ. 7 லட்சம் மதிப்பிலான 1,364 நட்சத்திர ஆமைகளைப் பறிமுதல் செய்த அலுவலர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது போலி முகவரியைப் பயன்படுத்தி, கடத்தல் கும்பல் நட்சத்திர ஆமைகளை மலேசியாவிற்குக் கடத்த முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் நட்சத்திர ஆமைகளை வண்டலூா் உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவா் பூங்கா ஆகிய இடங்களில் காட்சிப்பொருளாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்குப் பருவமழை பாதிப்பு - 78% கால்நடைகளுக்கு கோமாரி நோய்!