ETV Bharat / state

உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு பேருக்குத் தாக்குதல்: பொதுசுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு பேருக்குத் தாக்கியிருக்கலாம் என மாநில பொதுசுகாதாரத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு
உருமாறிய டெல்டா வைரஸ் 70 விழுக்காடு
author img

By

Published : Jun 20, 2021, 7:21 PM IST

சென்னை: இந்தியாவில் உருமாறிய கரோனா டெல்டா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவுகிறது எனவும், 70 விழுக்காடு பேருக்கு இந்த கரோனா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகவும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், 'டிசம்பர் 2020 முதல் மே 2021 வரை தமிழ்நாட்டில் சார்ஸ் கோவிட் 2 (SARS CoV-2) வைரஸின் தாக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பொதுசுகாதாரத்துறையின் அறிக்கை
பொதுசுகாதாரத்துறையின் அறிக்கை
தமிழ்நாட்டில் 1159 பேரிடம் கரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, முழு மரபணு வரிசைமுறை பகுப்பாய்வு பெங்களூருவில் செய்யப்பட்டது. இவர்களில் தற்பொழுது 605 மாதிரிகளில் 554 மாதிரிகளின் முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
70 விழுக்காடு பேரைப் பாதித்த உருமாறிய டெல்டா வைரஸ்

கரோனா பாதிக்கப்பட்ட 554 பேர் பரிசோதனை செய்யப்பட்டனர். அவர்களில் 386 மாதிரிகளில் அதாவது 70 விழுக்காடு பேருக்கு உருமாறிய கரோனா வைரஸ் டெல்டா (B.1.617.2) வகை தாக்கி இருப்பது தெரியவந்தது. மேலும் ஆல்பா (B.1.1.7) வகை உருமாறிய வைரஸ் 47 மாதிரிகளில் அதாவது 8.5 விழுக்காடு கண்டறியப்பட்டுள்ளது.
கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்ட விவரம்

இரண்டாம் அலையில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டதற்கு 'டெல்டா வகை கரோனா வைரஸ்தான் காரணம்' என ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
வயதைப் பொறுத்து கரோனா வைரஸின் பாதிப்பு விழுக்காடு

12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 19 விழுக்காடு பேர் டெல்டா வகை கரோனாவால் பாதிக்கப்பட்டனர். 13 வயது முதல் 17 வயது வரை உள்ள இளம்பருவத்தினரில் 3.4 விழுக்காடு பேரும், 18 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்களில் 46.1 விழுக்காடு பேரும், 45 வயதுக்கு மேற்பட்டோர் 31.6 விழுக்காடு பேரும் 'டெல்டா வகை கரோனா தொற்றால்' பாதிக்கப்பட்டிருந்தனர். இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலை... குழந்தைகளுக்கான பிரத்யேக மையம்: நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.