சென்னை: பொதுவாக கடுகை உணவு சமைப்பதில் தாளிப்பதற்காக பயன்படுத்துவர். இவை இல்லாத உணவு வகையே இருக்க முடியாது. ஆனால், அவற்றிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது.
கடுகு எண்ணெய்யை பயன்படுத்தலாமா?
கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டும் இல்லாமல் தலை முடி நன்றாக வளரும்.
கடுகு எண்ணெய்யின் நன்மைகள்:
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
- புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
- கடுகு எண்ணெய் குளிர்ச்சி தன்மை அற்றது. எனவே, இவை தலை வலி, தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சனைகளை சரிசெய்யும்.
- செரிமானத்தை மேம்படுத்துகிறது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கடுகு எண்ணெய் சுவாச பிரச்சனைகளான ஆஸ்துமா, சளி, இருமல் நீங்குவதற்கு உதவுகிறது.
- வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, இதன் விளைவாக எடை இழப்பும் ஏற்படுகிறது.
- கடுகு எண்ணெயை உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்திற்கு பொலிவு அளிக்கிறது.
- கடுகு எண்ணெய்யில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள், முகப்பரு அல்லது முகப்பரு தழும்புகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
- கடுகு எண்ணெயை உட்கொள்வது வாயு, மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணத்தை போக்க உதவுகிறது
- கடுகு எண்ணையில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன, இது வீக்கத்தைக் குறைக்கவும், மூட்டு வலிகளைக் குறைக்கவும் உதவுகிறது.
- கடுகு எண்ணெயில் செலினியம் என்ற ஊட்டச்சத்து நிறைந்துள்ளது, இது எலும்புகள், பற்கள் மற்றும் ஈறுகளை வலுப்படுத்துவதற்கு காரணமாகும்
- பாதங்களில் வெடிப்பு, நகங்களில் வெடிப்பு அல்லது தோல் உரிதல் போன்ற பிரச்சனைகளுக்கு உதவுகிறது.
கடுகு எண்ணெயின் பக்க விளைவுகள்:
- உங்களுக்கு கடுகு ஒவ்வாமை இருந்தால் தோலில் கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- அதிக அளவு கடுகு எண்ணெய் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்குகிறது.
- ஆயுர்வேத மருத்துவத்தின் படி, கடுகு எண்ணெய் பித்தத்தை அதிகரிக்கும். உடலில் அதிகளவில் பித்தம் இருந்தால் எரிச்சல், காய்ச்சல் மற்றும் அலற்சி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
- அதிக அளவு கடுகு எண்ணெயை உட்கொண்டால் இருதய பிரச்சினைகள், சுவாச பிரச்சனைகள், வயிற்றுப்போக்கு , இரத்த சோகை போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.
- கடுகு எண்ணெயில் உள்ள அதிக அளவு எருசிக் அமிலம் இதயத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது மற்றும் அதை கணிசமாக சேதப்படுத்துகிறது.
- அதிக அளவு கடுகு எண்ணெய் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது
கடுகு எண்ணெய்யை யார் பயன்படுத்தக் கூடாது:
- குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- கர்ப்பிணிப் பெண்கள் கடுகு எண்ணெயை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதில் உள்ள இரசாயன கலவைகள் வளரும் கருவுக்கும் தீங்கு விளைவிக்கும்.
முடிக்கு கடுகு எண்ணெய்:
- கடுகு எண்ணெய் கொண்டு தலைமுடியில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது.
- முடியில் ஏற்படும் வறட்சி, முடி உதிர்தல் மற்றும் பளபளப்பு இல்லாத கூந்தலுக்கு இது ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி கடுகு எண்ணெயில் புரோட்டின் மற்றும் ஒமேகா-3 கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இரண்டும் கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதையும் படிங்க: Earthen Pot Health Benefits in Tamil: மண் பானை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் 8 ஆரோக்கிய நன்மைகள்.!