குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த இஸ்லாமிய இனப்படுகொலையைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பேரணி நடத்துவதற்கு ஒன்று திரண்டனர்.
சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாகக் கூறி கையில் 500 அடி நீளம் கொண்ட தேசிய கொடியை ஏந்தியவாறும் பதாகைகளை ஏந்தியவாறும் பல்லாவரத்திலிருந்து பேரணியைத் தொடங்கினர்.
சென்னை விமான நிலையம் நோக்கிச் சென்ற பேரணியை பல்லாவரம் பழைய சந்தை சாலையில் காவல் துறையினர் நிறுத்தினர். பின்னர் காவல் துறையினர் அனுமதித்த இடத்தில் மேடை அமைத்த இஸ்லாமியர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ம.ம.க மாநில துணைப் பொதுச் செயலாளர் அப்துல் சமது கூறுகையில்:
தமிழ்நாட்டில் தேசிய மக்கள் கணக்கெடுப்பை அமல்படுத்த மாட்டோம் என்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மக்களை பிளவுப்படுத்தகூடிய CAA, NRC, NRP ஆகிய சட்டங்களை கைவிட வேண்டும் என மத்திய அரசையும், மாநில அரசையும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்