ETV Bharat / state

மனைவியை பிரிந்த டி.இமான் - அதிர்ச்சியில் ரசிகர்கள் - டி.இமான் விவாகரத்து

இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

டி.இமான்
டி.இமான்
author img

By

Published : Dec 29, 2021, 12:45 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் டி.இமான். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இசையமைப்பாளர் டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என் நல விரும்பிகள், ரசிகர்கள் அனைவரிடமும் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நம் வாழ்க்கை என்பது பல்வேறு விதமான பாதைகளை கொண்டது. அதை நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டோம்.

நானும், என் மனைவி மோனிகா ரிச்சர்ட்டும் சட்டப்பூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல. நாங்கள் இருவரும் நவம்பர் 2020 ஆம் ஆண்டு சட்ட ரீதியாகப் பிரிந்துவிட்டோம்.

எங்களின் தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பு கொடுத்து அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Golden visa: கோல்டன் விசாவை தட்டிச் சென்ற அமலாபால்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.