ETV Bharat / state

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து! - இளையராஜா

முதலமைச்சர் ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Music composer Ilayaraja wished Chief Minister Stalin on his birthday
முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து
author img

By

Published : Feb 28, 2023, 8:02 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து!

சென்னை: திமுக தலைவரும் தமிழ்நாடு‌ முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும் திமுகவினர் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் 'எங்கள் முதல்வர், எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடக்கிறது. இதனை நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

மேலும் பல்வேறு திரைப் பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் ஸ்டாலின் பிறந்தநாளுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் வீடியோ வெளியிட்டு முதலமைச்சருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். இந்த நிலையில் இசை அமைப்பாளர் இளையராஜாவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு உள்ளார்.

அதில், '70-வது பிறந்தநாளை கொண்டாடும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட‌ ஆயுளோடு நிறைய செல்வங்களோடு ஓங்கு புகழோடு வாழ வேண்டும் என்று இறைவனை‌ பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.