ETV Bharat / state

முரசொலி நில விவகாரம் - பட்டியலின ஆணையத் தலைவரிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம்! - Murasoli Land Issue

சென்னை: முரசொலி நில விவகாரம் தொடர்பாக பட்டியலின நல ஆணையத்தின் தலைவர் பதில் அளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Murasoli Land Issue High Court ordered  Commission head to respond
முரசொலி நில விவகாரம் : தாழ்த்தப்பட்டோர் ஆணைய தலைவரிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம்!
author img

By

Published : Feb 19, 2020, 7:37 AM IST

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் என்று, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவர் தேசிய பட்டியலின நல ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை விசாரித்த பட்டியலின நல ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன், இது தொடர்பாக விளக்கமளிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ஜனவரி 7ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

இதற்குத் தடை விதிக்க வேண்டுமென்று கோரி, முரசொலி அறக்கட்டளை சார்பில், அதன் அறக்கட்டளைதாரர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மு.க. ஸ்டாலினை நேரில் ஆஜராக தடை விதித்தது.

மேலும், பட்டியலின ஆணையத்தில் இந்த விவகாரத்தை விசாரிப்பதிலிருந்து அதன் துணைத் தலைவர் முருகன் விலகியிருக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் கூறியது. முரசொலி அறக்கட்டளை சார்பில் ஆவணப்பட்டியல் மட்டும் தாக்கல் செய்தால் போதுமானது எனவும் உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் முரசொலி அறக்கட்டளை சார்பில், பட்டியலின ஆணையத் தலைவரிடத்தில் ஆவணப்பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. பட்டியலின ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், முரசொலி விவகாரம் தொடர்பாக துணைத் தலைவர் முருகன் விசாரிக்கக் கூடாது என நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

திமுக சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பட்டியலின ஆணையத்தின் தலைவரிடம் முரசொலி நிலம் பட்டா நிலம்தான் என்பது குறித்தான ஆவணப்பட்டியல் தாக்கல் செய்துள்ளதாகவும், மேலும் தற்போது ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் முருகன் என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிட்டவர் என்றும்; பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி/எஸ்.டி அணியின் தேசியச் செயலாளராகவும் இருந்துள்ளார்.

அவர் தற்போது தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார். முரசொலி நில விவகாரம் தொடர்பாக முருகன் விசாரணை மேற்கொண்டால், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் இந்த விசாரணை மேற்கொள்வார் என்றும் தெரிவித்தார்.

Murasoli Land Issue High Court ordered  Commission head to respond
முரசொலி நில விவகாரம் : பட்டியலின ஆணையத் தலைவரிடம் பதில் கேட்டுள்ள நீதிமன்றம்!
இதையடுத்து நீதிபதி கார்த்திகேயன், முரசொலி நில விவகாரத்தில் துணைத்தலைவர் முருகனை விசாரிக்க வேண்டும் என ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பி, பட்டியலின ஆணையத்தின் தலைவரை இந்த வழக்கில் இணைக்குமாறும், முரசொலி அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்த மனுவிற்குப் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க : புதுச்சேரி-யாழ்ப்பாணம் இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து - மத்திய இணையமைச்சர் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.