சென்னை முகலிவாக்கத்தில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால் 9ஆம் வகுப்பு மாணவன் தீனா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு உதவி வழங்க எடுத்த நடவடிக்கை என்ன? சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்த அலுவலர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிர்வாக இயக்குநர் நான்கு வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:
மின் வாரிய அலுவலர்களின் அலட்சியம்... பள்ளி மாணவனின் உயிரைப் பறித்த கொடூரம்!