ETV Bharat / state

அக்.14ல் சென்னை வரும் சோனியா, பிரியங்கா காந்தி.. மகளிர் மாநாடு ஏற்பாடுகளை ஆய்வு செய்த எம்.பி.கனிமொழி! - chennai news

MP Kanimozhi: பாஜக-வை நாடாளுமன்றத்தில் இருந்தே முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

“பாஜக-வை நாடாளுமன்றத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்” - எம்.பி.கனிமொழி..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 11:02 PM IST

சென்னை: இந்தியா கூட்டணியின் சார்பில் வருகின்ற 14-ஆம் தேதி மகளிர் மாநாடு சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறு குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்விற்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடும் வகையிலும், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா பற்றிப் பேசுவதற்கும், நாட்டில் பெண்களுக்கு இருக்கக்கூடிய நிலைகளைக் குறித்துப் பேசுவதற்காகவும் வருகின்ற அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி, இந்திய கூட்டணியில் இருக்கக்கூடிய முக்கியமான பெண் தலைவர்கள் இந்த மாநாட்டிலே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பல்வேறு பெண் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மகளிர் உரிமை மாநாடு என்பதால் பெண் தலைவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளார்கள். இதில் முதலமைச்சர் மட்டும் கலந்து கொள்வார்.

இந்தியா கூட்டணி பொருத்தவரை முதலமைச்சர் அவர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இங்கு முதன்முதலாக நடைபெறுகிறது. எனவே, நிச்சயமாக மிகப் பெரிய கவனத்தைப் பெறக்கூடிய கூட்டமாக இருக்கும். பாஜக, இந்தியா என்ற பெயரை பாரத் என்று கூறிவரும் சூழ்நிலைகளில், அவர்கள் இது போன்ற பல முயற்சிகளைச் செய்து கொண்டிருப்பதன் மூலம், மேலும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

சோனியா காந்தி - முதலமைச்சர் நேரில் சந்திக்கும் வாய்ப்பு குறித்து அவர்கள் இருவரும் தான் முடிவெடுக்க வேண்டும். நிச்சயமாக அவர்கள் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 33 சதவீத பெண்கள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் கொண்டு வந்துவிட்டு, அது என்று நடைமுறைக்கு வரும் என்று தெரியாத நிலையில் இருக்கிறது.

இன்னும் 25 ஆண்டுகள் ஆனாலும், இதற்கு அடுத்து வரும் பல தேர்தலுக்கு பிறகும் கூட, இந்த சட்டம் அமலுக்கு வருமா? என்று சந்தேகமாக உள்ளது. பாராளுமன்றத்தில் இருக்கக்கூடிய மற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை எப்படிக் கொச்சைப்படுத்த வேண்டுமோ, அப்படி எல்லாம் பாஜக-வினர் செய்கிறார்கள்.

அதுமட்டுமின்றி, யார் அங்கு குரல் கொடுத்தாலும் அவர்களை பேசிவிடாமல் செய்கிறார்கள். மேலும் அங்கு இருக்கக்கூடிய மத்திய அரசு எந்த ஒரு விஷயத்தையும் விவாதிக்க விடாமல், தொடர்ந்து யாரையும் பேச விடாமல் செய்து வருகிறார்கள். ஆகவே வருகின்ற காலத்தில் நாடாளுமன்றத்தில் பாஜக-வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஆம்னி பேருந்து கட்டணத்தை நிர்ணயிக்க தனி ஆணையம் அமைக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.