கடந்த 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தென் கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் பிறந்தவர் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஸா பொஜனாக்கா. இவரது தனது எட்டு வயதில், தந்தையை இழந்தார். பிறகு தனது தாய் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.
இவருக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். அவரது பாடபுத்தகத்தில் எந்த பாடப்பகுதியை கேட்டாலும் தடையின்றி சொல்லும் அளவுக்கு வல்லமை படைத்தவர். இவருக்கு சிறுவயதிலிருந்தே ஆழந்த இறைபக்தியும், பொதுதொண்டில் மிகுந்த ஆர்வம் கொண்டு இருந்தார்.

இவர் 18 வயதில் ஐரிஸ் கன்னிகாஸ்திரிகளை கொண்ட லொரேட்டா கத்தோலிக்க கன்னிகா மடத்தின் உறுப்பினராக இருந்தார். அதன் பின் கல்கத்தாவில் இந்திய மிஸனரிகள் செய்து வந்த சமூக தொண்டுகளில் அதிகம் ஈர்க்கப்பட்டார்.
எனவே இவர் டுப்ளீனில் சில மாதங்கள் பயிற்சி பெற்றுபின் இந்தியாவுக்கு அனுப்பபட்டார்.அதன் பின் ஆன்மிகத்தை தொடரும் விதமாக அயர்லாந்து சென்றார். பிறகு 1931-ஆம் ஆண்டு ஞானஸ்நானம் பெற்று அன்னை தெரசாவானார்.
இவர் 1931-ல் இருந்து 1948 ஆம் ஆண்டு வரை கல்கத்தா புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார். அதன் பின் 1948-ஆம் ஆண்டு பாட்னாவில் மருத்துவத்தில் செவிலியர் பயிற்ச்சியை பெற்றார்.
இவர் செய்யும் சமூக தொண்டுகளில் பல சோதனைகளை கடந்துவந்துள்ளார். அதில் ஓன்றை குறிப்பிட வேண்டும் என்றால் இவர் தினமும் காலையில் நேரமாக எழுந்து,தனது குழுவினருடன் உதவி வாங்கச் செல்வார்.

அப்போது ஒரு கடையில் உதவி கேட்கும் போது அந்த கடைக்காரர் அவர்களை கண்டும் காணாதது போல் இருந்தார். ஆனால் இவர் அதையும் மீறி கடைக்கார்யிடம் உதவி கேட்டார். அதற்கு அந்த கடைக்காரர் தனது வாயில் மென்று கொண்டு இருந்த பாக்கை அவர் கையில் துப்பினார்.
ஆனால் அவர் அதை பெற்றுகொண்டு இது எனக்கு நீங்கள் கொடுத்தது, அங்கு பசியில் வாடும் குழந்தைகளுக்கு ஏதாவது தாருங்கள் என கேட்டார். இதை கேட்ட அந்த கடைக்காரர் மனம்மாறி உதவி செய்தார். இம்மாதிரியான பல அவமானங்களையும், சோதனையயையும் தனது தினசரி வாழ்வில் அன்றாட நிகழ்வாக கடந்துவந்துள்ளார்.
தெரசா அவர்கள் கொல்கத்தாவில் இருந்த போது அங்கு உள்ள ஏழை மக்களின் நிலை, பசியால் வாடும் குழந்தைகள்,பல வியாதிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், சுகாதாரமற்ற நிலையை கண்டு தெரசா அவர்கள் மிகுந்த வருத்தபட்டார். அச்சமயத்தில் அவர் டார்ஜிலிங்கில் உள்ள லொரேட்டா இல்ல பள்ளியில் ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டார்.
இவர் குழந்தைகளிடம் அன்பு, பாசம் காட்டி பாடத்தை கற்பித்தார். காலபோக்கில் இவர் இந்தியாதான் என் தாய்நாடு என முடிவுஎடுத்தார். பிறகு இந்தி மொழியை கற்றுக்கொண்டார். பிறகு அவர் கொல்கத்தாவிற்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்டார். அங்கு இவர் கற்பித்தல் பணியை தாண்டி சமூக பணிகளையும் செய்தார்.
இவர் மாணவர்களுக்கு பாடம் கற்பிப்பதை தாண்டி அவர்களுக்கு குளிப்பாட்டி,ஆடைமாற்றி அவர்களுக்கு சாப்பாடு ஊட்டினார். ஏழைமக்களை தேடி அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தார்.ஆசிரியாராக இருந்த தெரசா பின் பள்ளி முதல்வரானர். இதன் மூலம் இவர் பல்வேறு அனுபவங்களை பெற்றார்.

1943-ஆம் ஆண்டுகளில் இரண்டாம் உலகப்போரும்,விடுதலைப் போரட்டங்களும் நிகழ்ந்த காலகட்டத்தில் மக்கள் மிகுந்த கஷ்டத்தில் இருந்ததைக்கண்டு தெரசா அவர்களுக்கு முழுநேரமாக உதவி செய்ய முடிவுசெய்தார். லொரேட்டாவின் விதிமுறைகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே அவர் அந்த நிறுவனத்தில் இருந்து விலகினர்.
அதன் பின் முழுநேரமாக தனது சேவையை செய்ய தொடங்கினார். அந்த சமையத்தில் அவர் கையில் ஐந்து ரூபாய் பணமும்,மூன்று நீல நிற புடவையும் மட்டுமே இருந்தது. பின்பு இவர் குடிசையில் வசிக்கும் மக்களை சந்தித்து ஆறுதலாக பேசினார். தன்னால் இயன்ற உதவியை செய்வதாக அங்கு வசிக்கும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தார்.
தெரசாவுடன் சில மாணவியர் இணைந்து சேவைக்குழு ஒன்றை தொடங்கினர். இதில் மக்களுக்காக பணிசெய்வதையே முதன்மையாக கொண்டு செயல்பட்டனர். அதன் முதற்கட்டமாக கொல்கத்தாவில் உள்ள மோத்திஜீல் என்ற குடிசை பகுதிக்கு சென்றனர். அங்கு மக்களின் தலையாய தேவையாக இருந்தது பள்ளிக்கூடம் என்பது தெரியவந்தது. பிறகு சில காலங்களிலே ஐந்து மாணவர்களைக் கொண்டு பள்ளிக்கூடம் தொடங்கபட்டது. காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.
மருத்துவ உதவி இல்லாமல் பெண் ஒருவர் உயிரிழந்ததைக் கண்டு தெரசா மிகுந்த வேதனையடைந்தார். உடனடியாக சிறிய மருத்துவமனையைத் தொடங்கினார். அதில் ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல மருத்துவமனைக்கு உபரி மருந்துகளை வாங்கியும் சேவை செய்தார்.
1949ஆம் ஆண்டு மோதிஜில் என்ற பகுதிக்கு சென்று உங்களுக்குத் தொண்டு செய்யவே நான் இங்கு வந்துள்ளேன்.உதவி செய்ய என்னை அழைப்பீர்களா என்று கேட்டவாறு சுற்றுபுரத்தை சுத்தம் செய்ய தொடங்கினார்.

1965ஆம் ஆண்டு அன்னை தெரசா தலைமையில் மிஷனரிஸ் ஆஃப் சாரிட்டி இல்லம் தொடங்கப்பட்டது.இந்த அமைப்பு சர்வதேச அளவில் புகழ்பெற்று விளங்கியது. ஆதரவற்றோர்களுக்கும், தொழுநோயாளிகளுக்கும் அவர் செய்த தொண்டுகள் அளப்பறியது. ஏழை நோயாளிகளுக்கு வெறுமனே உதவி செய்பவராக மட்டும் அன்னை தெரசா இருக்கவில்லை,மாறாக அவர்களுடன் இணைந்து தமது வாழ்நாட்களை எல்லாம் அவர்களுக்காகவே செலவிட்டவர். தமக்கென்று எதையும் சேர்த்து வைக்காமல் எளிய வாழ்க்கை நடத்தியவர்.
தெரசாவுக்கு 1962ஆம் ஆண்டு பொதுச்சேவைக்கான இந்திய அரசின் ’பத்மஸ்ரீ’ விருது வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 1979ஆம் ஆண்டு அமைதிகான நோபல் பரிசும் வழங்கப்பட்டது. அவரது இடைவிடாத சமூக தொண்டை கௌரவிக்கும் விதமாக 1980ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்தனா’ விருது வழங்கப்படடது.
தெரசா இது போன்ற எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது புகழ் இம்மண்ணுலகம் இருக்கும் வரை போற்றப்படும். 45 ஆண்டு காலம் சமூகப்பணிகளில் மிகுந்த அர்பணிப்போடு ஈடுபட்டுவந்த அன்னை தெரசா, 1983-ஆம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டார்.
1997 செப்டம்பர் ஐந்தாம் தேதி கொல்கத்தாவில் உயிரிழந்தார். அன்னை தெராசாவிற்கு அவர் வாழ்ந்த மதம் வழங்கும் உயரிய அங்கீகாரமான ’புனிதர் பட்டம்’ கொடுக்கப்பட்டது. இன்று அவரது நினைவு நாள்.
இதையும் படிங்க: நாட்டின் விடுதலைப் போரில் ஜமீன்தார்களும், மன்னர்களும்!