சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அமர்நாத். இவர் தனது தாயார் சசிகலாவுடன் வசித்துவந்தார். குடிப்பழக்கம் உள்ள இவர், அடிக்கடி பணம் கேட்டும் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் தாயாரை தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படும்.
2016ஆம் ஆண்டு மே மாதம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அந்தத் தகராறின்போது அமர்நாத் தனது தாயாரை கத்தியால் குத்தி, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், தாய் சசிகலா உயிரிழந்தார்.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அமர்நாத் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10ஆண்டு சிறை