ETV Bharat / state

மகளுக்கு பாலியல் தொல்லை  தாய் புகார்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

author img

By

Published : Sep 7, 2021, 7:51 AM IST

mother-gave-complaint-to-commissioner-to-arrest-her-husband-who-give-sexual-torture-to-her-daughter
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை கைது செய்ய தாய் கண்ணீர் புகார்

சென்னை: சென்னை பகுதியைச் சேர்ந்த பெண், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார். அதில், தனது இரண்டாவது கணவர் கற்பகக்கனி, தனது 13 வயது மகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதாக கூறி பாலியல் தொல்லை அளித்துவந்ததாகவும், அதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக புகார் அளித்து முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்ட பின்பும் தனது கணவர் கைது செய்யப்படவில்லை எனவும், அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது காவல் நிலைய பெண் அலுவலர் தன்னிடம் 5ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பணம் இல்லை எனக்கூறிய தன்னை காவல் நிலைய கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: மெகா தொடர் மேலாளர் மீது ஆசிரியை பாலியல் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.